கறுப்புப் பணத்தை பாதுகாப்பது எப்படி? வாடிக்கையாளர்களுக்கு புதிய ஐடியா கொடுக்கும் சுவிஸ் வங்கிகள்!

Posted By:
Subscribe to GoodReturns Tamil

கறுப்புப் பணத்தை பதுக்கி வைக்க புது ஐடியாக்களை கொடுக்கும் சுவிஸ் வங்கிகள்
டெல்லி: கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் சுவிஸ் நாட்டு வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க புதிய அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.[

கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் சுவிஸ் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களை பாதுகாப்பதில் மும்முரம் காட்டிவருகின்றன. சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணத்தைப் பதுக்கியுள்ள வெளிநாட்டினரின் விவரங்களை அளிக்குமாறு பல்வேறு நாடுகளும் சுவிஸ் வங்கிகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. இதில் இருந்து தப்பிக்க புதிய வியூகங்களையும் சுவிஸ் வங்கிகள் செயல்படுத்தி வருகின்றன.

அதி முக்கிய வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பு உள்ள 1000 பிராங் நோட்டுகளை வாங்கி அதனை டெபாஸிட் செய்யுமாறு அவை கோரிக்கை விடுத்துள்ளன. மேலும், தங்கம், வைரம், கலைப்பொருள்கள், ஓவியங்கள் இவற்றில் முதலீடு செய்து அவற்றைப் பாதுகாக்க அவை வாடிக்கையாளருக்கு ரகசிய அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன.

சுவிஸ் நாட்டின் மத்திய வங்கி (சுவிஸ் தேசிய வங்கி) தரவுகளின் படி, 1000 பிராங் நோட்டுகள் சுவிஸ் நாட்டின் வங்கிப் பரிமாற்றங்களில் 60 விழுக்காடு இடத்தைப் பிடித்துள்ளது என்று தெரியவருகிறது. மேலும், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இது 50 விழுக்காடு அதிகரித்துள்ளது.

ஒரு 1000 பிராங் நோட்டு நமது இந்திய ரூபாயில் 60 ஆயிரம் என்பதால், அதிக மதிப்பு கொண்ட ரூபாய்களை மிக எளிதில் குறைந்த இடத்தில் வைத்துப் பாதுகாக்க முடிகிறதாம். உலகின் மிக அதிக மதிப்பிலான பண நோட்டுகளை வைத்திருக்கும் 5 நாடுகளில் சுவிட்சர்லாந்தும் ஒன்று. இங்கிலாந்து 50 பவுண்ட் (ரூ.4,300 மதிப்பு), மற்றும் அமெரிக்கா 100 டாலர் (ரூ.5,500 மதிப்பு) தான் தற்போது அதிக மதிப்பு கொண்ட ஒற்றை நோட்டாக உள்ளது.

முன்னர் அமெரிக்கா 500 டாலர், 1000 டாலர், 5000 டாலர், 10000 டாலர் நோட்டுகளை வெளியிட்டிருந்தது. ஆனால் 1945க்குப் பிறகு அவை வெளியிடப்படவில்லை. 1969-ம் ஆண்டுக்குப் பிறகு புழக்கத்தில் இருந்தே அவை முற்றாக நீக்கப்பட்டன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Black money: Swiss banks' new safe haven idea | கறுப்புப் பணத்தை பதுக்கி வைக்க புது ஐடியாக்களை கொடுக்கும் சுவிஸ் வங்கிகள்

Amid a global crackdown against alleged black money in secret accounts of Swiss banks, their bankers are selling a new safe-haven idea to their rich clients from India and other countries -- the high-value 1,000 franc notes to be stored in safe deposit boxes.
Story first published: Monday, July 2, 2012, 14:32 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns