இந்தியர்கள் எப்படி செலவு செய்கின்றனர்? முதலீடு செய்கின்றனர்?

Posted By:
Subscribe to GoodReturns Tamil

இந்தியாவில் அதிக சொத்து மதிப்புள்ள தனிநபர்கள் 3 வகையான பிரிவினராக இருக்கின்றனர். பரம்பரையாக சொத்து வைத்திருப்போர், தனிமனித உழைப்பால் உயர்ந்தோர் மற்றும் பணிபுரிந்து சொத்து சேர்த்தவர்கள் என்பதுதான் அந்த 3 வகை. அதாவது பழைய பணம்/ புதிய பணம் என்று இரு பிரிவு இருந்தாலும் அதை இந்த 3 வகையினராகத்தான் வகைப்படுத்த முடியும்.

பரம்பரையாக சொத்து வைத்திருப்போர் பார்ன் வித் சில்வர் ஸ்பூன் என்ற வகையினர். இருந்தாலும் அந்த பரம்பரை பணத்தை கூடுதலாக்க அல்லது அதை மெயின்டெய்ன் செய்ய கடும் பிரயத்னம் செய்ய நேரிடும். இளம்பிராய காலத்தில் எதுவும் கிடைக்காமல் போராடி நடுத்தர வர்க்கநிலையிலிருந்து அடுத்த கட்ட நிலையை அடைந்திருப்போர் தனிமனித உழைப்பாளிகள். இதேபோல்தான் ஒரு டாக்டர் அல்லது எஞ்சினியராகப் பணிபுரிந்து சொத்துகளை சேர்த்திருப்போர் இன்னொரு ரகம்.

செலவு முறை

அண்மையில் வெளியான ஒரு ரிப்போர்ட் என்ன சொல்கிறது எனில் பரம்பரையாக சொத்து வைத்திருப்போரை விட தனி நபராக அதிக சொத்து குவித்திருப்போரே அதிகம் என்கிறது. அதாவது பரம்பரையாக சொத்து இருக்கும் அதே நேரத்தில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தொழில்முறையாளனாகவோ அல்லது தொழில்துறை மூலமோ முன்னேறியிருக்கலாம் என்கிறது அந்த ரிப்போர்ட். இவர்கள்தான் அதிக அளவு செலவிடக் கூடியவர்கள்.அதாவது வீடு, உணவு, உடை, வாழ்க்கை முறையில் கூடுதலாக செலவுசெய்யக் கூடியவர்கள். அதேபோல் இவர்களது முதலீடும் கணிசமான அளவு இருக்கும்.

நாம் முன்னர் குறிப்பிட்டமே 3 வகையினர்...அவர்களோட செலவு முறையிலும் வேறுபாடு இருக்கும்...உதாரணமாகப் பார்த்தால் பரம்பரையாக சொத்து வைத்திருப்போர் குறிப்பிட்ட பிராண்ட்டுகளைப் பயன்படுத்துவது குறைவாக இருக்கும்.. ஆனால் அதை வெளிநாட்டில் இருந்துகூட வாங்கிக் கொள்வர். அதே நேரத்தில் தனிமனித உழைப்பால் உயர்ந்தவர்கள் குறிப்பிட்ட பிராண்ட் பொருட்களை விரும்புவர். ஆடம்பரமான பொருட்களையும் விரும்புவர். தொழில்முறையால் முன்னேறியவர்கள் பிராண்ட் வகை பொருட்கள்தான் என்று நினைப்பதில்லை. இவர்கள் தங்களது குடும்பத்தினருக்கு செலவழிப்பதில் முன்னுரிமை கொடுக்கக் கூடியவர்கள். தனிமனித உழைப்பாளிகள் தனிமனித உறவை மேம்படுத்திக் கொள்வதில் அக்கறை அதிகம் காட்டுவர். நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் அதிகமாக ஆலோசனை கேட்கக் கூடியவர்களாகவும் இருக்கின்றனர். பரம்பரையாக சொத்து வைத்திருப்போரோ அவர்கள் தங்களுக்கென ஒவ்வொரு துறைக்கும் ஆட்களை வைத்திருப்பர். அவர்களது வழிகாட்டுதலின்படியே நிதி விவகாரங்களை கையாள்வர்.

முதலீட்டு முறை

இந்த 3 வகையினரது முதலீட்டு முறையும் கூட வேறுபாடு கொண்டதாகத்தான் இருக்கும். பரம்பரையாக சொத்து வைத்திருப்போர் நிலையான வருவாய் தரக்கூடிய வகையிலான முதலீடுகளை விரும்புவர். தனிமனித உழைப்பால் சொத்து சேர்த்தோர் ரிஸ்க் எடுத்தே முதலீடு செய்வர். தொழில்முறையால் சொத்து சேர்த்தோர் ஒரு பகுதியைசெலவு செய்தாலும் கூடுதல் ரிஸ்க்குடன் முதலீடு செய்வர். ஆனால் பெரும்பாலும் இவர்கள் பிஸினஸில் ஆர்வம் குறைவாகவே காட்டுவர். இவர்கள் பெரும்பகுதியை முதலீடு செய்வதில் கவனம்செலுத்துவர். 4-ல் மூன்று பங்கை முதலீட்டாக்குவர்.

இப்படித்தான் இந்தியர்கள் செலவு செய்வதும் சேமிப்பதும் முதலீடு செய்வதுமான வாழ்க்கையை வாழ்கின்றனர்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How the rich in India Spend, Save and Invest their Money | இந்தியர்கள் எப்படி செலவு செய்கின்றனர்? முதலீடு செய்கின்றனர்?

Kotak has just published a report on High Net Worth Individuals in India, dividing up the growing group into 3 segments: The Inheritor, the Self-made and the Professional. The report acknowledges there are 2 distinct groups which are “Old Money" and “New Money" but that the 3 segments divide it up even more specifically.
Story first published: Friday, July 6, 2012, 16:49 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns