வரியில்லாத பத்திரங்கள் என்றால் என்ன?.. அது நன்மை தர கூடியதா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வரியில்லாத பத்திரங்கள் என்றால் என்ன?.. அது நன்மை தர கூடியதா?
வரியில்லாத பத்திரங்கள் (Tax free bonds) என்பது குறித்து பலரும் கேள்விபட்டிருக்கலாம். ஆனால் அது என்ன என்பது பலருக்கும் தெரியாது. முதலீட்டாளர்களுக்கு வட்டியாகக் கிடைக்கும் பணத்துக்கு வரி செலுத்த தேவையில்லை என்பதை குறிக்கும் பத்திரத்திற்கு தான் வரியில்லாத பத்திரங்கள் என்று பெயர்.

வரியில்லாத பத்திரங்களின் மூலம் பெறப்படும் வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டிய தேவையில்லை. மேலும் மற்ற வருவாய்களுக்கு வரி பிடித்தம் செய்யப்படும் போது, இந்த தொகை அதில் சேர்க்கப்படாது.

வரியில்லாத பத்திரங்கள் அரசு அங்கீகாரம் கொண்ட நிறுவனங்களின் மூலம் வழங்கப்படுகிறது. தேசிய பங்கு சந்தை மற்றும் மும்பை பங்கு சந்தை ஆகியவற்றில் வரியில்லாத பத்திரங்கள் வர்த்தகத்திற்கு பயன்படுத்தப்பட எளிய வழிகள் உள்ளன.

நீண்டகால மற்றும் 2ம் நிலை சந்தையில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு வரியில்லாத பத்திரங்கள் ஒரு பெரிய வரபிரசாதம் ஆகும். இதன்மூலம் கடந்த ஆண்டு முதலீட்டாளர்களுக்கு 8.20 முதல் 8.35 சதவீதம் வரியில்லாத கூப்பன்கள் வழங்கப்பட்டன. ஆனால் இந்த தொகை, முதலீட்டு நிறுவனத்தை பொறுத்து மாறுப்படும்.

வரி சேமிப்பு பத்திரங்களும், 80சிசிஎப் சட்டத்தின்படி வரி சலுகைகளை பெற உதவும் பத்திரங்களும் ஒன்றல்ல.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What are tax free bonds? Is it a good bet? | வரியில்லாத பத்திரங்கள் என்றால் என்ன?.. அது நன்மை தர கூடியதா?

Most of us have heard and read about tax free bonds but what exactly are tax free bonds? Tax free bonds are bonds whose interest returns are not taxable in the hand of the investors. The income from these bonds are tax free and hence do not form part of the total income in computing income tax.
Story first published: Tuesday, July 10, 2012, 12:02 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X