துபாய் டூட்டி ப்ரீ லக்கி டிராவில் ரூ.5.5 கோடி வென்ற இந்தியர்

Posted By:
Subscribe to GoodReturns Tamil

துபாயில் லக்கி டிராவில் ரூ.5.5 கோடி வென்ற இந்தியர்
துபாய்: துபாய் டூட்டி ப்ரீ நடத்திய அதிர்ஷ்ட குலுக்கலில் சவூதி அரேபியாவில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் பணிபுரியும் இந்தியர் ஸ்ரீஜு நம்பிரான்(34) ரூ.5.5 கோடி வென்றுள்ளார்.

துபாய் டூட்டி ப்ரீ கடந்த 1999ம் ஆண்டு முதல் அதிர்ஷ்ட குலுக்கல் நடத்தி வருகிறது. 13 ஆண்டுகளாக நடத்தப்படும் குலுக்கலில் இம்முறை சவூதி அரேபியாவில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் பணிபுரியும் ஸ்ரீஜு நம்பிரான்(34) என்ற இந்தியர் ரூ.5.5 கோடி வென்றுள்ளார். இந்த பரிசைப் பெறும் 54வது இந்தியர் ஸ்ரீஜு என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஸ்ரீஜு கூறுகையில்,

நான் கடந்த சில ஆண்டுகளாக இந்த அதிர்ஷ்ட குலுக்கலில் கலந்து கொண்டு தான் இருக்கிறேன். துபாய் டூட்டி ப்ரீயில் இருந்து என்னை செல்போனில் தொடர்பு கொண்டபோது ஏதோ ஜோக் என்று நினைத்தேன். பிறகு அவர்கள் எனது சீட்டு விவரங்களைத் தெரிவித்த பிறகு நான் கோடீஸ்வரனாகிவிட்டது தெரிந்தது என்றார்.

இந்த குலுக்கலில் தேர்தெடுக்கப்படும் மேலும் 2 பேருக்கு சொகுசு கார்கள் வழங்கப்படும். அதன்படி பஹ்ரைனில் வாழும் இந்தியர் இளம்துருத்தி ஜோசப் ராபின்சனுக்கு மெர்சிடீஸ் பென்ஸ் காரும், டெல்லியைச் சேர்ந்த தொழில் அதிபர் கயூர் முகமது கான்(49) என்பவருக்கு லேட்டஸ்ட் மாடல் பிஎம்டபுள்யூ 750 எல்ஐ எக்சிகியூட்டிவ் காரும் பரிசாக கிடைத்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian wins USD 1 mn draw in Dubai | துபாயில் லக்கி டிராவில் ரூ.5.5 கோடி வென்ற இந்தியர்

A 34-year-old Indian has won a USD 1 million lucky draw in Dubai Duty Free's 130th Millennium Millionaire festival. Sreeju Nambron, who works for a construction company in Saudi Arabia, had the winning ticket which made him the winner of the lucky draw.
Story first published: Wednesday, July 11, 2012, 15:33 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns