இந்திய பொருளாதார வளர்ச்சி 6.5% ஆகக் குறையும்: ஆசிய வளர்ச்சி வங்கி

Posted By:
Subscribe to GoodReturns Tamil

இந்திய பொருளாதார வளர்ச்சி 6.5% ஆகக் குறையும்: ஆசிய வளர்ச்சி வங்கி
பேங்காக்: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 6.5 சதவீதம் என்ற அளவிலேயே இருக்கும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி கணித்துள்ளது. அதே நேரத்தில் சீனாவின் வளர்ச்சி 8.2 சதவீதமாக இருக்கும் என்றும் கூறியுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன் 9 சதவீத வளர்ச்சியை எட்டியது இந்தியா. சீனாவின் வளர்ச்சி 10 சதவீதத்தைத் தாண்டியது.

ஆனால், அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார சீர்குலைவும், அதைத் தொடர்ந்து ஐரோப்பாவில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளும் இந்தியா மற்றும் சீனாவின் வளர்ச்சியையும் சரித்துவிட்டன.

இப்போது 6 சதவீதத்துக்கும் குறைவான வளர்ச்சி என்ற நிலையில் இந்தியா உள்ளது. (இந்தியாவின் ஒரு சதவீத வளர்ச்சி என்பது சுமார் 40 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவல்லது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வளர்ச்சி குறைந்தால் வேலைவாய்ப்புகளும் காணாமல் போகும்).

இந் நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் நிருபர்களிடம் பேசிய ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் ஹருஹிகோ குரூடா இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி இந்த ஆண்டு 7 சதவீதமாகவும் சீனாவின் வளர்ச்சி 8.5 சதவீதமும் என்று கூறியிருந்தார்.

ஆனால், கடந்த இரு மாதங்களுக்குள் நிலைமை மேலும் மோசமாகியுள்ளதையடுத்து, இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தில் 0.5 சதவீதத்தைக் குறைத்துள்ளது ஆசிய வளர்ச்சி வங்கி. அதாவது இந்திய வளர்ச்சி 6.5 சதவீதமாகவே இருக்கும் என்று கூறியுள்ளது.

அதே போல சீனாவின் வளர்ச்சி விகிதத்தை 0.3 சதவீதம் குறைத்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

ADB cuts India 2012 growth forecast to 6.5 pc, China to 8.2 pc | இந்திய பொருளாதார வளர்ச்சி 6.5% ஆகக் குறையும்: ஆசிய வளர்ச்சி வங்கி

China's economy is expected to grow 8.2 percent this year and Indian growth is forecast at 6.5 percent, Haruhiko Kuroda, the president of the Asian Development Bank, said on Thursday. The figures, which he gave at a conference in Bangkok, are down from the development bank's forecasts in April of 8.5 percent for China and 7.0 percent for India.
Story first published: Thursday, July 12, 2012, 15:18 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns