இன்போஸிஸ் ஊழியர்களுக்கு இப்போதைக்கு ஊதிய உயர்வு இல்லை!

Posted By:
Subscribe to GoodReturns Tamil

பெங்களூர்: இன்போஸிஸ் ஊழியர்களுக்கு இப்போதைக்கு ஊதிய உயர்வு ஏதும் தரப்பட மாட்டாது என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இன்று அந்த நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. லாபம் 33 சதவீதம் அதிகரித்தாலும் அமெரிக்க, ஐரோப்பிய வருவாய் குறைந்துள்ளது. மேலும் அடுத்த ஓராண்டும் நிலைமை கஷ்டமாகவே இருக்கும் என்று இன்போஸிஸ் அறிவித்துள்ளது.

முடுவுகளை அறிவித்து நிருபர்களிடம் பேசிய இன்போஸிஸ் தலைமை செயல் அதிகாரி சிபுலால், தலைமை நிதி அதிகாரி வி.பாலகிருஷ்ணன் ஆகியோர் கூறுகையில், இப்போதைக்கு எங்கள் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு ஏதும் தரப்பட மாட்டாது. அப்படி ஏதும் தருவதாக இருந்தால் அதைப் பற்றி அக்டோபர் மாதத்தில் தான் யோசிப்போம்.

அதே நேரத்தில் இந்த நிதியாண்டில் புதிதாக 35,000 பேரை சேர்க்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. இதில் 13,000 பேர் இன்போஸிஸ் பிபிஓ பிரிவில் சேர்க்கப்படவுள்ளனர்.

மேலும் மொத்தமுள்ள 1,51,151 ஊழியர்களில் இந்த ஆண்டு 20,000 பேருக்கு, அதாவது 13 சதவீதம் பேருக்கு, பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்றனர்.

கடந்த காலாண்டிலேயே ஊதிய உயர்வு இன்போஸிஸ் நிறுத்தி வைத்துவிட்டது குறிப்பிடத்தக்கது. நிலைமை இன்னும் சீராகாததால் இந்த காலாண்டிலும் ஊதிய உயர்வுகளுக்கு தடை தொடர்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Infosys Q1 FY13 results: No wage hike for now but hiring plan of 35000k on track | இன்போஸிஸ் ஊழியர்களுக்கு இப்போதைக்கு ஊதிய உயர்வு இல்லை!

In another indication of the slowdown worries plaguing Infosys, the company's CEO SD Shibulal on Thursday said that there would be no wage hike for now. "We will revisit the டி decision to give wage hikes if any in October," he said. However, the company said it will stick to its target of hiring 35,000 people this fiscal. The hiring plan, which includes 13,000 jobs for its BPO operations, will be adhered to despite an uncertain global economic growth environment and the wage-hike freeze.
Story first published: Thursday, July 12, 2012, 15:03 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns