இன்போசிஸ் லாபம் 33 சதவீதம் அதிகரிப்பு.. ஆனால்!

By Chakra
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்போசிஸ் லாபம் 33 சதவீதம் அதிகரிப்பு.. ஆனால்!
பெங்களூர்: இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய சாப்ட்வேர் நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு லாபம் 33 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனாலும், இது எதிர்பார்த்ததைவிடக் குறைவு என்பதால் அதன் பங்குகளின் விலைகள் இன்று பெரும் சரிவைக் கண்டன.

கடந்த ஆண்டு ஏப்ரல்-மே-ஜூன் காலாண்டில் ரூ. 1,722 கோடி லாபம் ஈட்டியிருந்த இன்போசிஸ் இந்த ஆண்டு அதே காலகட்டத்தில் ரூ. 2,289 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 33 சதவீதம் அதிகம் என்றாலும் பங்குச் சந்தையிலும் நிபுணர்களும் மதிப்பிட்டிருந்த ரூ. 2,450 கோடியை விட இது சுமார் ரூ. 200 கோடி குறைவே.

இதையடுத்து இன்று மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு 10 சதவீதம் வரை சரிந்தன.

ஐரோப்பாவில் நிலவும் பொருளாதார தேக்கம் மற்றும் அமெரிக்காவில் நிலவும் பொருளாதார மந்த நிலை பெரும்பாலான சாப்ட்வேர் நிறுவனங்களை பாதித்துள்ளனது. அதற்கு இன்போசிஸ் நிறுவனமும் தப்பவில்லை.

இந் நிலையில் இந்த ஆண்டில் தனது டாலர் வருவாய் வளர்ச்சி 5 சதவீதமாகவே இருக்கும் என்றும் இன்போசிஸ் அறிவித்துள்ளது. இது இந்த நிறுவனம் முன்பு கூறிய வளர்ச்சி விகிதத்தைவிட 50 சதவீதம் குறைவாகும்.

மேலும் அடுத்த காலாண்டில் நிறுவனத்தின் வருவாய், லாபம் ஆகியவை எப்படி இருக்கும் என்ற கணிப்பையும் இன்போசிஸ் வெளியிடவில்லை. தங்களது சேவையை பயன்படுத்தும் நிறுவனங்கள் எந்த அளவுக்கு அடுத்த காலாண்டில் தொழில்நுட்பத்துக்காக செலவிட உள்ளன என்பது தெளிவில்லாததால் தங்களால் கணிப்பை வெளியிட இயலவில்லை என இன்போசிஸ் கூறியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Infosys Q1 results, FY guidance disappoints; shares tank | இன்போசிஸ் லாபம் 33 சதவீதம் அதிகரிப்பு.. ஆனால்!

Infosys Technologies Q1 results for 2012-2013 has disappointed once again with profit after tax coming in at just Rs 2289 crores, against analysts expectations of around Rs 2,450 crores. The company reported a PAT of Rs 1,722 crore in the corresponding period of last year.
Story first published: Thursday, July 12, 2012, 11:06 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X