தீபாவாளிக்காக சொந்த ஊர் செல்வோரால் விறுவிறுவென நடைபெறும் ரயில் டிக்கெட் முன்பதிவு

Posted By:
Subscribe to GoodReturns Tamil

விறுவிறுவென ஹவுஸ்புல்லாகும் தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு
சென்னை: தீபாவளி பண்டிக்கைக்கான ரயில் முன்பதிவு தொடங்கிய ஒரே நாளில் நவம்பர் 9-ந் 16 எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான முன்பதிவு முடிந்துவிட்டது.

இந்த ஆண்டு நவம்பர் 13-ந் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. செவ்வாய்க்கிழமை தீபாவளி என்பதால் வெள்ளிக்கிழமை அதாவது நவம்பர் 9-ந் தேதியே பலரும் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிடுவர். இப்பொழுது 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யலாம் என்பதால் தீபாவளிக்கும் நேற்றே முன்பதிவு தொடங்கியது.

தமிழ்நாட்டின் அனைத்து ரயில் முன்பதிவு மையங்களிலும் கூட்டம் அலைமோதியது. கன்னியாகுமரி, திருச்செந்தூர், ராமேஸ்வரம் சேது, முத்துநகர், அனந்தபுரி, செங்கோட்டை, நெல்லை, பாண்டியன், ராமேஸ்வரம், மன்னார்குடி, ராக்போர்ட், சேலம் மற்றும் காரைக்கால் கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் சென்னை சென்ட்ரலிலிருந்து இயக்கப்படும் கோவை சேரன், மேட்டுப்பாளையம் நீலகிரி மற்றும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான, இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளுக்கான இடங்கள் அனைத்தும் சில நிமிடங்களிலேயே முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.இந்த ரயில்களில், மற்ற வகுப்புகளுக்கான டிக்கெட்கள் அனைத்தும், நேற்று பிற்பகல் 2 மணிக்கு முன்பாகவே, முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. பகலில் இயக்கப்படும், வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில், இரண்டாம் வகுப்பு ஏ.சி., சேர்கார் இடங்கள் அனைத்தும் ஹவுஸ்புல்லாகின. பல்லவன் மற்றும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் அதிக இடங்கள் முன்பதிவு செய்யப்படாமல் உள்ளன. நவம்பர் 10-ந் தேதி ஊருக்கு செல்வோர் இன்றும். 11-ந் தேதி செல்ல நாளையும் முன்பதிவு செய்யலாம். நவம்பர் 12ந் தேதி செல்ல நாளை மறுதினம் முன்பதிவு செய்யலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Diwali rush: 16 trains booked on Nov.9 | விறுவிறுவென ஹவுஸ்புல்லாகும் தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு

Tickets in 16 express trains, scheduled for forthcoming Deepavali festival on November 13, got over of reservations opening on Thursday.
Story first published: Friday, July 13, 2012, 10:28 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns