இது மார்க்கெட் கணிப்புகளை விட அதிகமாகும்.
அமெரிக்கா, ஐரோப்பாவில் நிலவும் பொருளாதார பிரச்சனைகள் காரணமாக இந்த ஆண்டில் தனது டாலர் வருவாய் வளர்ச்சி 5 சதவீதமாகவே (இது முன்பு கூறியதை விட 50% குறைவு) இருக்கும் என்றும் இன்போசிஸ் நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், தங்களது லாபமும், வருவாயும் பாதிக்கப்படாது என்றும் டிசிஎஸ் அறிவித்துள்ளது.
குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பாவில் இருந்து தங்களுக்கு அதிகமான புரஜெக்டுகள் கிடைத்து வருவதாகவும் டிசிஎஸ் கூறியுள்ளது.
சர்வதேச அளவில் நிலவும் கடும் பொருளாதார சிக்கல்களுக்கு இடையிலும் டிசிஎஸ் அடைந்துள்ள வளர்ச்சியும், இந்த நிதியாண்டில் பிரச்சனை இருக்காது என்ற அதன் அறிவிப்பும் அந்த நிறுவனத்தின் பங்கு விலைகளை இன்று உயரச் செய்தது.
கடந்த 3 மாதங்களில் இன்போசிஸ் நிறுவனம் 4,962 பேரை பணியில் சேர்த்துள்ளது. இதன்மூலம் அந்த நிறுவனத்தின் ஊழியர்களின் எண்ணிக்கை 2,43,545 ஆக உயர்ந்துள்ளது.