இந்தியாவில் முதலீடு செய்வது கஷ்டமாகிவிட்டது: ஒபாமா

Posted By:
Subscribe to GoodReturns Tamil

இந்தியாவில் முதலீடு செய்வது கஷ்டமாகிவிட்டது: ஒபாமா
வாஷிங்டன்: இந்தியாவின் பலதுறைகளிலும் நேரடி அன்னிய முதலீடுகளுக்கு தடை இருப்பதால் அமெரிக்க முதலீடுகளை இந்தியாவில் மேற்கொள்ளக் கூடிய சூழல் இல்லாமல் இருக்கிறது என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ஒபாமா அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

இந்திய பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. ஆனால் சர்வதேச பொருளாதார சூழலினால் பின்னடைவை சந்தித்துக் கொண்டிருக்கிறது.

இந்தியா- அமெரிக்க நட்புறவுக்கு அடிப்படையாக இருக்கக் கூடிய அமெரிக்க வர்த்தக சமூகமானது, இந்தியாவில் முதலீட்டுக்கான சூழல் இல்லை என்ற கருத்தை வெளிப்படுத்துகின்றனர். இந்தியாவில் முதலீடு செய்வது கடினம் என்கின்றனர் அவர்கள்.

இந்தியாவின் பல துறைகளில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு தடை இருப்பதை அமெரிக்க வர்த்தக சமூகம் சுட்டிக்காட்டி வருகிறது. இந்தியாவின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு நேரடி அன்னிய முதலீடு அவசியமானது. இருப்பினும் இந்தியா உட்பட எந்த ஒருநாட்டின் பொருளாதார கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. அதை இந்தியாதான் தீர்மானிக்க வேண்டும்.

தற்போதைய சர்வதேச பொருளாதார சந்தையில் உள்ள கடினமான நிலைமைகளை எதிர்கொள்ள பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய தருணத்தில் இந்தியா இருக்கிறது என்றார் அவர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India limits FDI in too many sectors: Barack Obama | இந்தியாவில் முதலீடு செய்வது கஷ்டமாகிவிட்டது: ஒபாமா

Noting that India prohibited foreign investment in too many sectors such as retail, US President Barack Obama on Sunday cited concerns over deteriorating investment climate there to endorse another "wave" of economic reforms.
 
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns