அமெரிக்க விசா கட்டண உயர்வால் விழிபிதுங்கும் ஐடி நிறுவனங்கள்

Posted By:
Subscribe to GoodReturns Tamil

விசா கட்டணங்களால் விழிபிதுங்கும் ஐடி நிறுவனங்கள்
டெல்லி: இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு தலைவலி கொடுக்கும் வகையில் விசா கட்டணத்தை கடுமையாக உயர்த்தியிருக்கிறது அமெரிக்கா. இதனால் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான இன்போசிஸ், டிசிஎஸ் உள்ளிட்டவைகளின் வருவாயில் பாதிப்புக்கு வாய்ப்பிருக்கிறது.

இந்திய மென்பொருள் நிறுவனங்களுக்கு அமெரிக்காதான் முதன்மை சந்தை. ஆனால் விசா நடைமுறைகளை அமெரிக்கா மட்டும் கடுமையாக மாற்றியமைத்திருக்கிறது. இது மென்பொருள் நிறுவனங்களின் முதலாவது காலாண்டிலேயே எதிரொலித்திருக்கிறது.

இந்திய மென்பொருள் நிறுவனங்களின் விசா நிராகரிப்பு விகிதமும் கணிசமாக உயர்ந்திருப்பதும் விசா கட்டணம் உயர்ந்திருப்பதும் இந்நிறுவனங்களை கவலைகொள்ள வைத்திருக்கிறது.

முன்னணி நிறுவனமான டாடா கன்சல்டன்சி 5,900 ஹெச்-1பி விசாக்களுக்கு இந்த ஆண்டு விண்ணப்பித்திருக்கிறது. கடந்த ஆண்டு 4500 விசாக்கள்தான் கோரியிருந்தது. அமெரிக்காவுக்கான விசா கோரி வந்த விண்ணப்பங்களில் கடந்த ஆண்டு 40 சதவீதம் நிராகரிக்கப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலான இந்திய நிறுவனங்கள் எல்-1 மற்றும் ஹெச்-1பி விசாக்களுக்குத்தான் விண்ணப்பிக்கின்றன. இரண்டு விசாக்களினது கட்டணமும் கடந்த 2010-ம் ஆண்டு முதல் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் முதலாவது காலாண்டில் ஃஇன்போசிஸ் நிறுவனமானது விசா கட்டணத்துக்கு மட்டும் 7மில்லியன் டாலர் செலவழித்துள்ளது. அதாவது மொத்தம் 202 கோடி ரூபாயை செலவழித்திருக்கிறது. அதன் மொத்த வருவாயில் இது 0.6 விழுக்காடு. கடந்த ஆண்டு ரூ184 கோடி ஒதுக்கியிருந்தது. இதே நிலைமைதான் மற்ற அனைத்து நிறுவனங்களுக்கும் என்பதால் அனைத்தும் கவலை கொண்டுள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: us visa
English summary

Rising visa costs may pinch profits of IT companies | விசா கட்டணங்களால் விழிபிதுங்கும் ஐடி நிறுவனங்கள்

Indian IT companies, including market leaders TCS and Infosys, may have to bear huge costs towards employee visa fees going ahead, which in turn can put pressure on their profit margins.
 
Story first published: Sunday, July 15, 2012, 17:05 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns