பணவீக்கம் கொஞ்சம் குறைந்தது.. ஆனால் உணவுப் பொருட்கள் விலை விர்ர்..!

Posted By:
Subscribe to GoodReturns Tamil

டெல்லி: நாட்டின் பண வீக்கம் ஜூன் மாதத்தில் 7.25 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது கடந்த மே மாதத்தில் இது 7.55 சதவீதமாக இருந்தது.

கடந்த 2011ம் ஆண்டு ஜூன் மாதத்தில், நாட்டின் பணவீக்கம், 9.51 சதவீதம் என்ற அளவில் மிக கவலையளிக்கும் நிலைக்கு அதிகரித்தது. அதே நேரத்தில் இந்த ஜூன் மாதத்தில் இது 7.25 சதவீதமாகக் குறைந்துள்ளது.

உற்பத்திப் பொருட்களின் விலை குறைந்துள்ளதால் தான் பணவீக்கம் குறைந்துள்ளது.

ஆனாலும் ஒட்டுமொத்த உணவுப் பொருள் பணவீக்கம் (food inflation) ஜூன் மாதத்தில் 10.84 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது மே மாதத்தில் 10.74 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.

உணவு பணவீக்கம் அதிகரித்திருப்பதே நாட்டின் பணவீக்கம் அதிகரித்ததற்கு முக்கிய காரணமாகும்.

அதே நேரத்தில் எரி பொருள் பணவீக்கம், 10.27 சதவீதமாக சரிவடைந்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே மாதத்தில், 11.53 சதவீதமாக இருந்தது.

பணவீக்கம் குறையாத நிலையில் கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைப்பதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Inflation eases a bit but RBI may not go for rate cuts! | பணவீக்கம் கொஞ்சம் குறைந்தது.. ஆனால் உணவுப் பொருட்கள் விலை விர்ர்..!

Headline inflation eased a tad to 7.25 per cent in June from 7.55 per cent in May following a marginal cooling in prices of manufactured goods. But the decline in the WPI (wholesale price index) numbers is not significant enough to convince the Reserve Bank of India (RBI) to cut interest rates, as is being demanded by India Inc. to boost business confidence and spur growth.
Story first published: Tuesday, July 17, 2012, 11:27 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns