
திங்கள்கிழமை பங்கு வர்த்தகத்தில் ஓ.என்.ஜி.சி.யின் பங்குகள் சந்தை மதிப்பு ரூ.2,42, 890 கோடியாக இருந்தது. இது டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பைவிட ரூ1,105 கோடி அதிகமாகும். அதாவது டிசிஎஸ் மதிப்பு 2,41,785 கோடியாக இருந்தது. 3-வது இடத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் உள்ளது. அதன் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ2,34,785 கோடி. கோல் இந்தியா நிறுவனத்தின் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ 2,24,167 கோடியாகும். ஐடிசி நிறுவனத்தின் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ1,98,822 கோடியாகும்.
கடந்த 3-ந் தேதியும் டிசிஎஸ் நிறுவனத்தின் பங்குகளின் சந்தை மதிப்பை விட ஓ.என்.ஜி.சி. சந்தை மதிப்பு கூடுதலாக இருந்தது. ஆனால் மறுநாளே டிசிஎஸ் தமது இடத்தை எட்டிப்பிடித்தது.
பங்குகளின் சந்தை மதிப்பு என்பது பங்குச் சந்தையில் பட்டியிலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த பங்குகளின் மதிப்பின் அடிப்படையில் கணக்கிடப்படுவதாகும்.


Click it and Unblock the Notifications