புதிய சந்தைகளால் நாட்டின் ஆயத்த ஏடை ஏற்றுமதி அதிகரிப்பு

By Mathi
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆயத்த ஆடைகளுக்கு புதிய சந்தை- நாட்டின் எற்றுமதி அதிகரிப்பு
டெல்லி: ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகள் புதிய சந்தைகளாக உருவெடுத்திருப்பதால் நாட்டின் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியானது கடந்த நிதி ஆண்டில் 315 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியானது 2009-10ம் ஆண்டில் 270 கோடி டாலராக இருந்தது. ஆயத்த ஆடை ஏற்றுமதி அதிகரித்திருப்பதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பு கணிசமாக இருந்து வந்தது. இருப்பினும் இந்த நாடுகளின் பொருளாதார மந்தநிலை ஆயத்த ஆடை தொழிலிலும் எதிரொலித்தது.

இதனால் புதிய சந்தையை நாட வேண்டிய நிலை ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்பட்டது. லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகள் இப்புதிய சந்தையாக உருவெடுத்ததன் விளைவாக ஏற்றுமதி கணிசமாக உயர்ந்துள்ளது.

மேலும் அண்மையில் டெல்லியில் நடத்தப்பட்ட ஆயத்த ஆடை கண்காட்சியை ஜப்பான், மலேசியா, ஆஸ்திரேலியா, உருகுவே, பிரேசில், மெக்சிகோ, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா மற்றும் இஸ்ரேல் போன்ற புதிய சந்தைகளில் நடத்தவும் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் திட்டமிட்டுள்ளது.

நாட்டின் மொத்த ஏற்றுமதியானது கடந்த 2011-12ஆம் ஆண்டில் 30,370 கோடி டாலராக இருந்தது. இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Garment exports to non-traditional markets up by 16% in FY12 | ஆயத்த ஆடைகளுக்கு புதிய சந்தை- நாட்டின் எற்றுமதி அதிகரிப்பு

India’s garment exports to non- traditional markets like Latin America and Africa grew by about 16 per cent to $3.15 billion in 2011-12, Apparel Export Promotion Council (AEPC) said today.
Story first published: Saturday, July 21, 2012, 12:09 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X