பறவைகளை 'சூ சூ' என விரட்ட விமானத்திலேயே கருவிகளைப் பொருத்த முடிவு!

விமானங்களுக்கு பெரிய எதிரியே சாதாரண பறவைதான். பறவைகளைப் பார்த்துதான் மனிதன் விமானங்களைக் கண்டுபிடித்தான். ஆனால் இன்று இந்த பறவைகள்தான் வி்மானங்களின் பெரிய எதிரியாக மாறியுள்ளன. பறவைகள் மோதலால் விமானங்கள் பெருமளவில் சேதமடைகின்றன. இதனால் விமான நிறுவனங்கள் நஷ்டத்தை சந்திக்கின்றன.
இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்ட தற்போது விமானங்களைத் தயாரிக்கும்போதே பறவைகளை விரட்டுவது தொடர்பான நவீன சாதனங்களையும் அதில் பொருத்துவது குறித்து விமான தயாரிப்பு நிறுவனங்கள் ஆலோசனையில் இறங்கியுள்ளன
இதுதொடர்பாக ஏர்பஸ் நிறுவனம் பர்டி என்று பெயரிடப்பட்டுள்ள Bird Impact Repellent and Deterrent sYstem (BIRDY) புதிய திட்டத்தை பரிசீலித்து வருகிறது. இந்த புதிய சாதனம் மூலம் அனைத்து வகை பறவைகளையும் விமானத்தை நெருங்க விடாமல் விரட்ட முடியும் என ஏர்பஸ் நம்புகிறது.


Click it and Unblock the Notifications