கொடநாட்டில் ஏ.டி.எம். மையத்தை திறந்து வைத்த ஜெயலலிதா

Posted By:
Subscribe to GoodReturns Tamil

கொடநாட்டில் ஏ.டி.எம். மையத்தை திறந்து வைத்த ஜெயலலிதா
கொடநாடு: கொடநாட்டில் பாங்க் ஆப் இந்தியாவின் ஏ.டி.எம். மையத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், இயற்கை எழில் கொஞ்சும், இந்த நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட கொடநாட்டில் பாங்க் ஆப் இந்தியாவின் இந்த கொடநாட்டில் காட்சி முனையின் ஏ.டி.எம். மையத்தையும், புதுப்பிக்கப்பட்ட ஈளாடா கிளையையும் திறந்து வைத்து, நலிந்தோருக்கு கடனுதவி வழங்கி, உங்களிடையே உரையாற்றுவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த ஏ.டி.எம். சேவையின் மூலம் இங்குள்ள மக்கள் தங்கள் கணக்கில் உள்ள பணத்தை தங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் தேவைக்கேற்ற அளவில் எளிதாக எடுத்துக் கொள்ள இயலும். மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை வெகு தூரம் சென்று வாங்க ஏ.டி.எம். கார்டை பயன்படுத்துவதன் மூலம் பணம் களவு போவதும் தொலைந்து போவதும் தடுக்கப்படும்.

பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது வள்ளுவரின் வாக்கு. பொருளைப் பெறாவிட்டால் பட்டறையில் இரும்பு படுவது போன்று துன்பப்பட வேண்டும் என்பதை உணர்ந்து இங்குள்ள மக்கள் எல்லாம் சேமிப்பில் ஈடுபட வேண்டும்.

வங்கிகளில் நாம் சேமிக்கும் பணம் நாட்டின் திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த வங்கியிடமிருந்து விவசாயக் கடன், வணிகக் கடன், வாகனக் கடன், கல்விக் கடன், வீட்டு வசதிக் கடன் ஆகியவற்றையும் பெற்று உங்களுடைய வாழ்க்கையை, நீங்கள் எல்லாம், வளப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதே சமயத்தில், பணம் மட்டுமே வாழ்க்கையாகி விடாது. பணத்தால் உடல் ஆரோக்கியத்தை பெற இயலாது. எனவே, பணத்துடன் கூடிய நல்ல மனமும் வேண்டும். அதுவே எப்பொழுதும் நமக்கு நல்ல மகிழ்ச்சியை தரும். உண்மையான மகிழ்ச்சியை வாடிக்கையாளர்கள் மனதில் ஏற்படுத்தும் பணியில் வங்கிகள் ஈடுபட வேண்டும்.

இப்பகுதி மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறும் வகையில் குறைந்த வட்டியில் அதிக தவணை முறையில் அவர்களுக்குத் தேவையான கடன் உதவிகளை வங்கிகள் வழங்க வேண்டும். இதே போன்று, கடன் பெறுவோரும், வாங்கிய கடனை, தவறாமல் திரும்பச் செலுத்தி, மேலும் பல பயன்களை வங்கி மூலம் பெற வேண்டும். இந்தக் கொடுக்கல் - வாங்கலில் இரு சாராரும் தங்கள் மனசாட்சிக்கேற்ப நடந்து கொள்ள வேண்டும்.

ஏற்றத்தாழ்வற்ற, சமதர்ம சமுதாயம் அமைப்பதற்காக பாடுபடும் தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்களுக்கு வங்கிகளும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.விவசாயம், தொழில், வணிகம், சிறுதொழில், பொருளாதாரம் முதலியன செழிக்கும் வண்ணமும், மக்களுடைய வாழ்க்கைத் தரம் உயரும் வண்ணமும், இந்த வங்கியின் பணிகள் அமைய வேண்டும் என்றும், ஈளாடா கிளை, இந்தியாவிலேயே சிறந்த கிளை என்ற நற்பெயரை எய்த வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன் என்றார் ஜெயலலிதா.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Jayalalithaa inaugurates ATM unit at Kodanad viewpoint | கொடநாட்டில் ஏ.டி.எம். மையத்தை திறந்து வைத்த ஜெயலலிதா

The salubrious hills here reverberated with the cheering of thousands of excited locals and ADMK members as chief minister Jayalalithaa stepped out of her Kodanadu estate and inaugurated an ATM unit at the adjacent Kodanadu viewpoint
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns