2,000 பணியாளர்களை நீக்கும் யூனிநார் செல்போன் நிறுவனம்

Posted By:
Subscribe to GoodReturns Tamil

2,000 பணியாளர்களை நீக்கும் யூனிநார் செல்போன் நிறுவனம்
கொல்கத்தா: நார்வேயை சேர்ந்த டெலிநார் நிறுவனத்தின் செலவை குறைக்கும் வகையில் 2 ஆயிரம் பணியாளர்களை நீக்க தீர்மானித்துள்ளது.

நார்வேயை சேர்ந்த தொலைத் தொடர்பு நிறுவனமாக டெலிநார், இந்தியாவில் யூனிநார் என்ற பெயரில் தொலைத் தொடர்பு சேவையில் ஈடுபட்டு வருகிறது. தமிழகம், கேரளா, கர்நாடகா உட்பட 13 பகுதிகளில் யூனிநார் சேவை உள்ளது.

ஆனால் தற்போது நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள யூனிநார் நிறுவனம் 2ஜி அலைவரிசை இணைப்பில் களமிறங்க உள்ளது. இதனால் இந்தியாவில் பணியாற்றி வரும் 17,500 பணியாளர்களில் 2 ஆயிரம் பேரை பணியில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளது. இந்த 2 ஆயிரம் பேரில் 400 பேர் யூனிநார் நிறுவனத்திலும், மீதமுள்ள 1,600 பேரை விநியோகஸ்தர்களாகவும் பணியாற்றி வந்தனர்.

இந்தியாவில் ஜி.எஸ்.எம் சேவையை அளித்து வரும் யூனிநார் நிறுவனம், அதிக வருமானம் இல்லாத தமிழகம், கேரளா, கர்நாடகா, ஒடிசா ஆகிய 4 பகுதிகளில் உள்ள சேவையை நிறுத்தி கொள்ள திட்டமிட்டுள்ளது. அதற்கு பதிலாக அதிக வருமானம் கிடைக்கும் மற்ற பகுதிகளில் முதலீடு செய்ய அந்த நிறுவனம் தீர்மானித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Uninor to slash 2,000 jobs in India | 2,000 பணியாளர்களை நீக்கும் யூனிநார் செல்போன் நிறுவனம்

Norway's Telenor will cut 2,000 jobs - over 11% of its 17,500-strong India workforce as part of a cost-cutting drive and reallocation of resources in the run-up to participating in the upcoming 2G airwaves auction.
 
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns