ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி: கசக்கிறது சர்க்கரை விலை

Posted By:
Subscribe to GoodReturns Tamil

ஏற்றுமதிக்கு அனுமதி- கசக்கும் சர்க்கரை விலை
சென்னை: சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதால் சர்க்கரை விலை ரூ38 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் விளைச்சல் அதிகரித்திருப்பதால் பூண்டு, மிளகாய், புளி மற்றும் வத்தல் விலை குறைந்துள்ளது.

சுமார் 18 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து 100 கிலோ சர்க்கரை மூட்டை ரூ2950ஆக இருந்தது. இது தற்போது ரூ3,600 ஆக அதிகரித்திருக்கிறது. இதனால் 1 கிலோ சர்க்கரை ரூ31-ல் இருந்து ரூ38 ஆக உயர்ந்திருக்கிறது.

வடமாநிலங்களில் பருவமழை பொய்த்துவிட்டதால் பருப்பு விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

1 கிலோ கொண்டை கடலை பருப்பு ரூ60-ல் இருந்து ரூ72ஆகவும், துவரம் பருப்பு 1 கிலோ ரூ68-ல் இருந்து ரூ80 ஆகவும், தான்சானியா துவரம் பருப்பு 1கிலோ ரூ55 லிருந்து ரூ65 ஆக அதிகரித்துள்ளது. உளுந்தம்பருப்பின் விலை 1 கிலோ ரூ55-ல் இருந்து ரூ68 ஆகவும் பாசிப்பருப்பு 1 கிலோ ரூ65ல் இருந்து ரூ75 ஆகவும் இருக்கிறது.

இதேபோல் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் வகைகளை பல நிறுவனங்கள் இருப்பு வைத்துள்ளதால் இதன் விலையும் கடுமையாக உயர்ந்திருக்கிறது. 1 கிலோ பாமாயில் ரூ65லிருந்து ரூ70 ஆகவும் சன்பிளவர் ஆயில் ரூ75-ல் இருந்து ரூ80 ஆகவும் நல்லெண்ணெய் ரூ140-ல் இருந்து ரூ150 ஆகவும் அதிகரித்துள்ளது.

ஆனால் பூண்டு விலை ரூ70-ல் இருந்து ரூ55 ஆக குறைந்துள்ளது. புளி, மிளகாய் வத்தல் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Centre relaxs sugar export norms: Price rises | ஏற்றுமதிக்கு அனுமதி- கசக்கும் சர்க்கரை விலை

Sugar price rises very high due to centre's decision on relax for sugar export norms.
Story first published: Friday, July 27, 2012, 11:56 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns