மழை பொய்த்தாலும் போதுமான உணவு தானிய கையிருப்பு இருப்பதால் கவலை வேண்டாம்: அமைச்சர் கே.வி. தாமஸ்

By Mathi
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மழை பொய்த்தாலும் உணவு பற்றாக்குறை வராது.. : மத்திய அமைச்சர் கே.வி. தாமஸ்
சென்னை: நாட்டில் பருவமழை பொய்த்துப் போனாலும் போதுமான அளவு உண்வு தானியங்கள் அரசிடம் கையிருப்பு இருப்பதால் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்று அச்சப்படத் தேவையில்லை என மத்திய உணவு அமைச்சர் கே.வி. தாமஸ் கூறியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் அவர் பேசியதாவது:

 

நாட்டின் சில மாநிலங்களில் நடப்பாண்டில் போதுமான மழை பெய்யவில்லை. இருப்பினும் இதற்காக அச்சப்படத் தேவையில்லை. நாட்டில் சர்க்கரை மற்றும் தானியங்கள் போதுமான கையிருப்பு உள்ளது. கடந்த ஆண்டு உற்பத்தியான தானியங்கள் மற்றும் சர்க்கரை கூடுதலாகவே இருப்பதால் இந்த ஆண்டு உற்பத்தியும் வறட்சியை சமாளிக்க உதவும்.

மொத்தம் 82 மில்லியன் உணவு தானியங்கள் கையிருப்பில் உள்ளது. பொதுவிநியோகத்துக்கு மொத்தம் 55 மில்லியன் டன்தான் தேவை. அரிசியைப் பொறுத்தவரையில் ஓராண்டுக்கான இருப்பும் கோதுமையைப் பொறுத்தவரையில் 3 ஆண்டுகளுக்கான இருப்பும் அரசாங்கத்திடம் இருக்கிறது. காய்கறிகள், பழங்கள், எண்ணெய் மற்றும் பருப்பு வகைகளின் தேவைகள்தான் இப்போதைய பிரச்சனை. இவை இறக்குமதி செய்யப்படும்.

வறட்சியை நாம் முன்னதாகவே கவனித்து வருகிறோம். அதனால் கவலைப்பட வேண்டியது இல்லை. நடப்பு ஆண்டு நமக்கு 23 விழுக்காடு அளவுக்கு மழை குறைந்து போயுள்ளது. கர்நாடகத்தின் ஒரு பகுதி, மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் மத்திய இந்தியாவின் சில பகுதிகள் குறைவான மழைப் பொழிவால் பாதிக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Geared up to face drought situation, says Centre | மழை பொய்த்தாலும் உணவு பற்றாக்குறை வராது.. : மத்திய அமைச்சர் கே.வி. தாமஸ்

Government on Friday said the spectre of drought over a few states and the likelihood of a lower rainfall pattern in 2012 should not be a concern for a 'panicky situation,' as it is geared up to face the situation with enough stocks of foodgrains and sugar.Last year the production of both foodgrains and sugar had overshot the estimate leaving the government with adequate resources for the coming years, Union Minister of State (In-charge) for Food K.V. Thomas said.
 
Story first published: Saturday, July 28, 2012, 8:54 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X