பூமிப்பந்தில் இன்னும் 18 வருஷத்துல வறுமை காணாமல் போய்விடுமாம்: அமெரிக்க அறிவுஜீவிகள்

Posted By:
Subscribe to GoodReturns Tamil

நியூயார்க்: பூமிப் பந்தில் 2030-ம் ஆண்டில் வறுமை என்பதே இல்லாமல் போய் மத்திய தர வர்க்கம் என்பது 2 பில்லியன் தொகை அதிகரித்துவிடும் என்கின்றனர் அமெரிக்க அறிவுஜீவிகள்.

அதாவது உலகளாவிய வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இத்தகைய ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றனர். தற்போது ஒரு அமெரிக்க டாலருக்கும் குறைவாக ஒரு நாள் ஊதியம் பெறுவோர் எண்ணிக்கை 1 பில்லியன் எனில் இது இன்னும் 20 ஆண்டில் பகுதியாகக் குறைந்துவிடும் என்கிறார் அமெரிக்காவின் அறிவுஜீவியான கிறிஸ்டோபர் கோம். மத்திய தரக் குடும்பங்களின் தற்போதைய வளர்ச்சி நீடிக்குமானால் இது 2030-ம் ஆண்டில் 2 பில்லியனாக அதிகரிக்கும் என்பதும் இவரது கருத்து. அதாவது வறுமையில் இன்று உழல்வோர் விரைவில் மத்திய தர வர்க்கமாகிவிடுவராம்.

இதேபோல் வேறு என்ன ஊகங்களை வெளிப்படுத்தியிருக்கின்றனர்?

- சர்வதேச அளவிலான உணவுத் தேவை என்பது 50 விழுக்காடு அதிகரித்துவிடும்.

- உலக மக்கள் தொகையானது 7.1 முதல் 8.3 பில்லியனாக இருக்கும்.

- வறட்சியான பகுதியில் உலகின் 50 விழுக்காடு பேர் வசிக்க நேரிடும்.

- நகரங்களில் வசிப்போரின் எண்ணிக்கை 50 விழுக்காட்டிலிருந்து 60 விழுக்காடாக அதிகரித்துவிடும்.

- இந்தியா, வியட்நாம், இந்தோனேசியாவில் குறைந்த ஊதியத்துக்கு தொழிலாளர்கள் கிடைக்கும் நிலை மாறி சீனர்களின் ஆதிக்கம் அதிகரிக்க்குமாம்.

வறுமையே இல்லாத ஒரு உலகமும் உருவாவது எனில் நம்புறது அவ்வளவு எளிதானது அல்ல!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Global poverty to be virtually wiped out by 2030, claims top U.S. think tank | இன்னும் 18 ஆண்டுகளில் உலகில் வறுமையே இருக்காதாம்: அமெரிக்க அறிவுஜீவிகள் கருத்து

Poverty across the planet will be virtually eliminated by 2030, with a rising middle class of some two billion people pushing for more rights and demanding more resources, the chief of the top U.S. intelligence analysis shop said on Saturday. If current trends continue, the 1 billion people who live on less than a dollar a day now will drop to half that number in roughly two decades, Christoper Kojm said.
Story first published: Monday, July 30, 2012, 16:35 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns