மற்ற விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை.
ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சுப்பாராவ் இந்த நிதியாண்டுக்கான இடைக்கால நிதி கொள்கையை இன்று வெளியிட்டார். அதில், பண வீக்க விகிதம் குறையாததால் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வட்டி விகிதம் 8 சதவீதமாகவே நீடிக்கும்.
எஸ்எல்ஆர் (Statutory Liquidity Ratio) விகிதம் என்பது ஒவ்வொரு வங்கியும் தங்களது வைப்புத் தொகையில் ஒரு பகுதியை அரசின் கடன் பத்திரங்களில் கட்டாயமாகச் செய்யும் முதலீடாகும். இதன் மூலம் வெளிச் சந்தையில் புழக்கத்தில் உள்ள உபரி பணத்தை மீண்டும் ரிசர்வ் வங்கிக்கே திருப்பி விட முடியும். நாட்டில் அனாவசிய பணப்புழக்கம் குறையும்.
இந்த முறை 1 சதவிகிதம் எஸ்எல்ஆர் குறைக்கப்பட்டு, 23 சதவீதமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கூடுதல் ரொக்கம் புழக்கத்துக்கு வரும்.
சிஆர்ஆர் (4.75 %), ரெபோ ரேட் (8%), ரிவர்ஸ் ரேட்டில் மாறுதல் இல்லை.
வளர்ச்சித் விகிதம் 7.3 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உரங்கள் - எரிபொருள் மானியத்தை குறைக்க யோசனை
உரங்கள் மற்றும் எரிபொருள்களுக்கு மாநில அரசுகள் வழங்கும் மானியத்தை நிறுத்த அல்லது குறைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது ரிசர்வ் வங்கி.