அமெரிக்கர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பை வழங்கும் இந்திய ஐடி நிறுவனங்கள்

Posted By:
Subscribe to GoodReturns Tamil

அமெரிக்கர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பை வழங்கும் இந்திய ஐடி நிறுவனங்கள்
வாஷிங்டன்: இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் அமெரிக்க அலுவலகங்களில் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பை அதிக அளவில் வழங்கி வருகின்றன.

அமெரிக்காவில் பொருளாதார மந்த நிலையால் வேலையின்மை விகிதமானது 8 விழுக்காட்டுக்கும் அதிகமாக இருந்து வருகிறது. மேலும் இந்தியாவில் உள்ள்ள சாஃப்ட்வேர் நிறுவனங்களுக்கு அமெரிக்க நிறுவனத்தின் பணிகள் அளிப்பதால் ஏற்பட்டுள்ள சர்ச்சையைத் தவிர்க்கும் வகையில் அமெரிக்கர்களுக்கு கூடுதல் வேலை வாய்ப்பை வழங்குவதை இந்திய ஐடி நிறுவனங்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றன.

இந்தியாவில் மென்பொருள் ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ள டி.சி.எஸ். நிறுவனம் கடந்த ஆண்டு 1,600 அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்தது. இந்த ஆண்டு இன்ஃபோசிஸ் நிறுவனமும் 2000 அமெரிக்கர்களை பணியில் அமர்த்த முடிவு செய்திருக்கிறது.

இதேபோல் விப்ரோ நிறுவனமும் அமெரிக்கர்கள் 3,500 பேரை பணியில் அமர்த்தியிருக்கிறது. பொதுவாக விப்ரோ நிறுவனங்களின் பணியில் 50 விழுக்காடு அமெரிக்கர்களை அமர்த்த விப்ரோ முடிவு செய்திருக்கிறது.

ஹெச்.சி.எல். நிறுவனம் அடுத்த 3 ஆண்டுகளில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த 10 ஆயிரம் பேரை பணியில் சேர்க்க முடிவு செய்திருக்கிறது. இதன் மூலம் வரிச்சலுகைகள் பெற முடியும் என நம்புகிறது ஹெச்.சி.எல்.

இருப்பினும் இந்திய பணியாளர்களுக்கு அமெரிக்கா விசா கட்டணத்தை உயர்த்திருப்பதாலேயே இத்தகைய முடிவுக்கு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது,

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TCS, Infosys & Wipro lead recruitment drive; mid-level companies too not far behind | அமெரிக்கர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பை வழங்கும் இந்திய ஐடி நிறுவனங்கள்

Indian software companies are stepping up hiring in the United States -- both from colleges and experienced professionals, including displaced workers from their client organisations -- as they combat visa rejections and election-time anti-offshoring rhetoric in their largest market.
 
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns