வட மாநிலங்கள் போல தமிழகத்தில் மின்தடை ஏற்படாதாம்.. (கரண்ட் இருந்தா தானே பிரச்சனை வரும்!)

Posted By:
Subscribe to GoodReturns Tamil

வட மாநிலங்கள் போல தமிழகத்தில் மின்தடை ஏற்படாதாம்.. (கரண்ட் இருந்தா தானே பிரச்சனை வரும்!)
சென்னை: நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் திடீர் மின் தடை ஏற்பட்டதற்கு மாநில அரசுகளே காரணம் என்று மத்திய மின்துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகிச் செல்லும் சுஷில் குமார் ஷிண்டே குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய மின் கிரிட்டில் இருந்து கூடுதலாக மின்சாரத்தை எடுப்பதால்தான் கட்டுப்பாட்டு மையங்களில் பிரச்சனை ஏற்படுகிறது. கிரிட்டில் இருந்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மின்சாரத்தை மட்டுமே மாநில அரசுகள் பெற வேண்டும். இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். சட்டவிரோதமாக மின்சாரத்தைக் கூடுதலாக எடுக்கும்போதுதான் மின் வினியோகம் பாதிக்கப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.

இந் நிலையில் வட மாநிலங்களில் ஏற்பட்ட மிகப்பெரிய அளவிலான மின்தடை போல் தமிழகத்தில் பிரச்சனை ஏற்படாது என்று தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் பெருமை பீற்றிக் கொண்டுள்ளது.

இதற்கு அந்த அமைப்பு சொல்லும் முக்கியக் காரணம், தமிழகத்தில் மின் கட்டமைப்பு முறையாக பராமரித்து வரப்படுகிறது என்பதே.

ஆனால், கரண்ட் இருந்தா தானே பிரச்சனையே வரும் என்கின்றனர் பொது மக்கள்!.

தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வட மண்டல மின் கட்டமைப்பில் ஏற்பட்ட எதிர்பாராத மின் தடையால் டெல்லி, பஞ்சாப், ஹரியானா, இம்மாசல பிரதேசம், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு-காஷ்மீர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய எட்டு வடமாநிலங்களில் மின் வினியோகம் முழுவதும் பாதிக்கப்பட்டது. இதனால் டெல்லி மாநகர ரெயில் போக்குவரத்து மற்றும் குடிநீர் வினியோகம் அனைத்தும் பாதிப்பிற்குள்ளானது. டெல்லி விமான நிலையத்தில் அத்தியாவசியமான தேவைகள் ஜெனரேட்டர்கள் மூலம் மின்தேவை பூர்த்தி செய்யப்பட்டது.

ஆக்ரா அருகில் 400 கிலோ வால்ட் மின் தொடரமைப்பில் ஏற்பட்ட பழுதே இந்த மின்தடைக்கு காரணம் என்று முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. பருவ மழையின்மையினால் தற்போது நடவுகாலத்தில் விவசாயிகள் நிலத்தடி நீரையே விவசாயத்திற்கு அதிகம் பயன்படுத்துவதால் கடந்த சில நாட்களாக மின் கட்டமைப்பின் மொத்த மின்தேவை அதிகரித்துள்ளது.

இம்மாதிரியான நிலைமையை தவிர்க்க தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மற்றும் புதுச்சேரியை உள்ளடக்கிய தென் மாநிலங்களிணைந்த மின் கட்டமைப்பை, மத்திய அரசின் நிறுவனமான பெங்களூருவில் உள்ள தென் மண்டல மின் அனுப்புகை மையம் கண்காணித்து வருகிறது.

தென்மண்டல மின் கட்டமைப்பின் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கினை, இந்திய மின்கட்டமைப்பின் 2010 விதிகளின்படி இயக்க வேண்டி தென்மண்டல கட்டமைப்பின் கீழ் வரும் மாநிலங்கள் தங்கள் மின் பளுவை கட்டுப்படுத்தி, தென் மண்டல கட்டமைப்பின் அதிர்வெண்ணை 49.5க்கு மேல் இயக்குமாறு கண்காணித்து வருகிறது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்ததாலும், காற்றாலை மின் உற்பத்தியின் நிலையற்ற தன்மையாலும் மத்திய மின் உற்பத்தி நிலையங்களில் அவ்வப்போது ஏற்பட்ட பழுது காரணமாகவும் மின் உற்பத்தி குறையும் நேரத்தில், இந்திய மின் கட்டமைப்பு 2010 விதிகளின்படி மின்கட்டமைப்பின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியுள்ளது. எனவே வட மாநிலங்களில் ஏற்பட்ட மிகப்பெரிய அளவிலான மின்தடை போல் தமிழகத்தில் ஏற்படாமலிருக்கும் வகையில் பொதுமக்களின் நலன் கருதியும் கட்டமைப்பின் பாதுகாப்பு கருதியும் அதன் அதிர்வெண்ணை அதன் இயக்க எல்லைக்குள் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் முறையாக பராமரித்து வருகிறது என்பதால் வட மாநிலம் போன்று இங்கு மின்தடை ஏற்பட வாய்ப்பில்லை.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Call to maintain grid discipline | வட மாநிலங்கள் போல தமிழகத்தில் மின்தடை ஏற்படாதாம்.. (கரண்ட் இருந்தா தானே பிரச்சனை வரும்!)

In the wake of the Northern, Eastern and North Eastern grids collapsing on Tuesday, resulting in power failure in 22 states including the capital New Delhi, southern states have been asked to reduce load and maintain “grid discipline” to avoid power blackouts.
Story first published: Wednesday, August 1, 2012, 9:54 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns