'சாப்டப் போலாமா'... இனிமேல் மெயில்ல கேட்காதீங்க, நேர்லயே கேளுங்க, கம்பெனிக்கு நல்லது!

Posted By:
Subscribe to GoodReturns Tamil

'சாப்டப் போலாமா'... இனிமேல் மெயில்ல கேட்காதீங்க, நேர்லயே கேளுங்க, கம்பெனிக்கு நல்லது!
லண்டன்: அலுவலகங்களில் வேலை பார்ப்போர் தங்களது ஒரு நாளில் கால்வாசியை அதாவது இரண்டரை மணி நேரத்தை மெயில் பார்ப்பதற்கும், மெயில் அனுப்புவதற்குமே செலவிடுகிறார்களாம்.

மெக்கின்சே குளோபல் என்ற நிறுவனம் இதுதொடர்பாக ஒரு சர்வேயை நடத்தியுள்ளது. அதில்தான் இந்த விவரத்தைத் தெரிவித்துள்ளது. ஊழியர்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும்போது அவர்களின் உற்பத்தித் திறனை இந்த இமெயில்கல் கால்வாசி அளவுக்குக் காலி செய்து விடுகிறதாம்.

ஒரு நாளில் இரண்டரை மணி நேர அளவுக்கு மெயில்களைப் பார்ப்பது, அனுப்புவது, மெயில்களை அழிப்பது என செலவிடுகிறார்களாம் ஊழியர்கள்.

அலுவலகம் போவோர் ஒரு வருடத்திற்கு சராசரியாக 81 நாட்கள் கம்ப்யூட்டர்களிலேயே செலவிடுகிறார்களாம். கம்ப்யூட்டரில் உட்காரும்போது பெரும்பாலும் இமெயில்களுக்காகத்தான் உட்காருகிறார்களாம்.

இமெயில் பார்ப்பது, பேஸ்புக் பார்ப்பது, டிவிட்டருக்குப் போவது ஆகியவற்றை நிறுத்தி விட்டால், ஒரு ஊழியரால் அவரது உற்பத்தித் திறனை 25 சதவீத அளவுக்குக் கூட்ட முடியுமாம்.

ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்போர் முடிந்தவரை சக ஊழியர்களுடன் நேரிலேயே பேசுவதை ஊக்கப்படுத்த வேண்டும். மெயில் அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும். அப்போதுதான் உற்பத்தித் திறனை கூட்ட முடியும் என்கிறது இந்த ஆய்வு முடிவு.

சாப்டப் போலாமா, தம் அடிக்கப் போறேன் வர்றியா, யோவ், என்னய்யா பண்றே .. இத்யாதி இத்யாதி விசாரிப்புகளையெல்லாம் இனிமேல் நேராகவே போய் சொல்லிட்டு செய்யுங்க.. கம்பெனிக்கு நல்லது!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Employees spend a quarter of their day checking emails: Study | 'சாப்டப் போலாமா'...இனிமேல் மெயில்ல கேட்காதீங்க, நேர்லயே கேளுங்க, கம்பெனிக்கு நல்லது!

Working individuals spend two-and-a-half hours on an average writing emails every day, a new study has found, suggesting changes in the way people use computers that could make them 25 per cent more productive. A poll carried out by McKinsey Global Institute based on a typical working week of 46 hours found that more than a quarter of most employees' time is wasted sending, receiving or sorting out emails instead of doing their jobs, the 'Daily Mail' reported.
Story first published: Thursday, August 2, 2012, 12:13 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns