ஒரு நல்ல நியூஸ்.. வீட்டுக் கடனுக்கான வட்டி குறைகிறது..

Posted By:
Subscribe to GoodReturns Tamil

டெல்லி: வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி விகிதத்தை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா குறைத்திருக்கும் நிலையில் தேசிய வீடமைப்பு வங்கியும் (National Housing Bank) வட்டி விகிதத்தைக் குறைத்திருக்கிறது. .

தேசிய வீடமைப்பு வங்கியானது குறைந்த வருவாய் பிரிவினருக்காக ரூ5 லட்சம் வரையில் வழங்கிய கடனுக்கான வட்டி விகிதத்தில் 0.75 முதல் 1 விழுக்காடு வரை குறைத்திருக்கிறது.

ரூ2 லட்சம் வரையிலான கடனுக்கான 10 விழுக்காடு வட்டியை 9 விழுக்காடாகவும் ரூ2 லட்சம் முதல் ரூ5 லட்சம் வரையிலான கடனுக்கான வட்டி விகிதம் 9.25 விழுக்காடாகவும் இருக்கும் என்றும் தேசிய வீடமைப்பு வங்கி அறிவித்திருக்கிறது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தேசிய வீடமைப்பு வங்கியின் மேலாண் இயக்குநர் ஆர்.வி. வர்மா, இந்த வீட்டு கடன்களுக்கான இலக்தை நடப்பு நிதி ஆண்டில் ரூ17 ஆயிரமாக வைத்திருக்கிறோம். இதற்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

முன்னதாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியும் இதேபோல் வட்டி விகித குறைப்பை அமல்படுத்தியிருந்தது.

இனி எதிர்வரும் நாட்களிலும் வட்டி விகிதத்தை மேலும் குறைக்கக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக இரு வங்கிகளும் தெரிவித்துள்ளன. ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக வட்டி குறைப்பு நடவடிக்கைகளில் வங்கிகள் இறங்கியுள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Home loans may become cheaper | ஒரு நல்ல நியூஸ்.. வீட்டுக் கடனுக்கான வட்டி குறைகிறது..

A day after SBI reduced home and auto loan rates, the National Housing Bank, the regulator for home finance firms, pared the refinance rate under a special scheme by 75-100 basis points, signalling the possibility of a further rate cut.
Story first published: Friday, August 3, 2012, 12:52 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns