ப.சிதம்பரம்... இவர் அமைச்சரா? அல்லது CEOவா?

By Chakra
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  ப.சிதம்பரம்... இவர் அமைச்சரா? அல்லது CEOவா?
  டெல்லி: புதிய நிதியமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ப.சிதம்பரம் தனது அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளின் விடுமுறைகளை ரத்து செய்துவிட்டார். ஆகஸ்ட் 8ம் தேதி நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கவுள்ளதால் அதற்கான குறிப்புகளைத் தயார் செய்ய வார இறுதியில் விடுமுறை நாட்களிலும் அவர்களை பணி செய்யச் சொல்லிவிட்டார் என்கிறார்கள்.

   

  சிதம்பரத்துடன் பணியாற்றிய நிதித்துறை அதிகாரிகளுக்கு இது புதிதல்ல. வழக்கமாக காலை 8.30 மணிக்கே அலுவலகத்துக்கு வந்துவிடும் சிதம்பரம், முதல் வேலையாக மூத்த அதிகாரிகளுடன் நாட்டின் அன்றைய நிலவரம் குறித்து விவாதிப்பார்.

  அடுத்ததாக அவர் செய்யும் வேலை தான் மிக இன்ட்ரஸ்டிங்கானது. நேற்று எவ்வளவு வருமான வரி வசூல் ஆனது என்ற விவரம் அவரிடம் தரப்பட வேண்டும். அதைப் பார்த்துவிட்டுத் தான் அடுத்த வேலையை ஆரம்பிப்பார்.

  ஆனால், ஜனாதிபதியாகிவிட்ட பிரணாப் முகர்ஜி நிதியமைச்சராக இருந்தபோது நிலைமை வேறு. அவர் மிக லேட்டாகவே அலுவலகம் வருவார். ஆனால், இரவில் நெடுநேரம் அலுவலகத்தில் இருப்பார்.

  ஆனால், சிதம்பரம் காலையில் மிக சீக்கிரமே வந்துவிடுவார். இதனால் அதிகாரிகளும் காலையில் சீக்கிரமே அலுவலகம் வந்துவிடுகின்றனர்.

  மாலையில் இத்தனை மணிக்குப் போவார் என்றில்லாமல் எந்த நேரம் வரையும் வேலையில் இருப்பார். இதனால் அவர் போகும் வரை அதிகாரிகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அவர் எப்போது கிளம்புவார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.

  ஒரு பைலில் கையெழுத்துப் போடும் அதன் விவரங்களை மிகத் தெளிவாக உள்வாங்கும் திறமை கொண்டவர் சிதம்பரம். இந்த பைலை சிதம்பரத்திடம் தந்த அதிகாரியிடம் கேள்விகள் கேட்டு, விளக்கங்களை வாங்கிய பிறகே கையெழுத்துப் போடுவார். இதனால், அவரிடம் பைலை கொண்டு செல்லும் முன் அதிகாரிகள் அது குறித்த முழு விவரத்தோடு போக வேண்டும். இல்லாவிட்டால் திட்டு உறுதி.

  வழக்கமாக அதிகாரிகள் சொல்லும் இடத்தில் கையெழுத்து போடுபவர்களே அமைச்சர்களாக உள்ள நிலையில், சிதம்பரத்தை அறிந்தவர்கள், அவர் மிக மிக வித்தியாசமானவர் என்கின்றனர்.

  சட்டமும் படித்தவர் என்பதால் எந்த ஒரு சிறிய திட்ட மாறுதல்களையும் அதன் விளைவுகளோடு சேர்த்து யோசிப்பது தான் சிதம்பரத்தின் பலம். இதனால், திட்டங்கள் தொடர்பான பைல்களை அவரிடம் கொண்டு செல்லும் முன் பலமுறை யோசித்துவிட்டு, முழு விவரங்களோடு தான் போக வேண்டும் என்கின்றனர்.

  அதே நேரத்தில் பைல் முழு விவரத்துடன் இருந்தால், அதை இழுத்தடிக்காமல் படாரென முடிவெடுத்துவிட்டு அடுத்த வேலைக்குப் போய்விடுவார்.

  அதே போல உள்துறையில் இருந்தபோதும் தனது காலையை உளவுப் பிரிவின் தலைவர்களுடனான சந்திப்புடன் தான் ஆரம்பிப்பார். அன்று நடக்கப் போகும் சம்பவங்கள் குறித்த உளவுப் பிரிவினரின் சில முன் தகவல்களை வைத்துக் கொண்டு, அடுத்தடுத்து செய்ய வேண்டிய வேலைகளை உடனடியாக உத்தரவு போடுவார்.

  தீவிரவாதம், தாக்குதல்கள் தொடர்பான தகவல்களை மாநில உளவுப் பிரிவினருடன் real-time basis-ல் உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளச் செய்வதோடு, அவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதையும் உடனுக்குடன் தனக்கு அப்டேட் கிடைக்க வேண்டும் என்பார்.

  அதே போல தன்னைச் சந்திக்க மிக மூத்த அதிகாரிகளுக்கு மட்டுமே அனுமதி என்றில்லாமல், துணைச் செயலாளர் அளவில் இருப்பவரைக் கூட இன்டர்காமில் கூப்பிட்டு அவரிடம் கருத்துக் கேட்பார்.

   

  சிறிய அதிகாரிகள் எழுதிய குறிப்புகளைக் கூட சீரியஸாக படிப்பார். அந்த அதிகாரியின் குறிப்பை சீனியர் அதிகாரிகள் எந்த அளவுக்கு மதித்தனர் என்பதையும் பார்ப்பார் என்கிறார்கள்.

  முகர்ஜியைப் பொறுத்தவரை அவரை கீழ்நிலை அதிகாரிகள் யாரும் தொடர்பு கொள்ளக் கூட முடியாதாம்.

  சிதம்பரம் அனுப்பிய சர்க்குலர்:

  இந் நிலையில் துணைச் செயலாளர்கள் மற்றும் அதற்கு மேல் உள்ள நிதித்துறை அதிகாரிகளுக்கு சிதம்பரம் ஒரு சர்க்குலரை அனுப்பியுள்ளார். அதில், இப்போது நீங்கள் பார்க்கும் வேலை உங்களுக்குப் பிடித்துள்ளதா? என்று முதல் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

  ஆம், பிடித்துள்ளது என பதில் எழுதினால், உங்களது பணியை மேலும் மேம்படுத்த என்ன செய்யப்பட வேண்டும்? என்று கேட்கிறது இரண்டாவது கேள்வி.

  இல்லை, எனக்குத் தரப்பட பணி பிடிக்கவில்லை என்று பதில் எழுதினால், பெரிய வம்பு காத்திருக்கிறது. அதாவது அடுத்து 3 கேள்விகளுக்கு அவர்கள் பதில் தர வேண்டும்.

  அதில் முதல் கேள்வி, மீண்டும் உங்களது சொந்த பணிக்கே (நிதித்துறைக்கு வரும் முன் இருந்த பதவி) செல்ல விருப்பமா?, வேறு அமைச்சகத்துக்குச் செல்ல விருப்பமா?, அல்லது நிதியமைச்சகத்திலேயே வேறு பதவிக்குப் போக விருப்பமா? என கேள்விகள் தொடர்கின்றன.

  நிதியமைச்சகத்திலேயே வேறு பதவிக்குப் போக விருப்பம் என்று பதில் எழுதினால், அந்தப் பதவியில் நீங்கள் எப்படி சிறப்பாக செயல்பட முடியும் என்று கருதுகிறீர்கள்..? என்று அடுத்த கேள்வியும் வருகிறது.

  இதனால் பெரும்பாலான அதிகாரிகள், நான் இருக்கும் பதவியிலேயே சந்தோஷமாகத் தான் இருக்கேன் என்று பதில் எழுதிவிட்டுத் தப்பும் மூடில் இருப்பதாக சொல்கிறார்கள்.

  சிதம்பரத்தின் செயல்பாடுகள் வழக்கமாகவே இவர் அமைச்சரா? அல்லது CEOவா? என்று கேள்வி கேட்க வைக்கும். இந்த முறையும் அது தொடர்கிறது.

  கலக்குங்க.. சிதம்பரம்!

  தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

  English summary

  Ministry of finance becomes a busy abode as P Chidambaram gets cracking | ப.சிதம்பரம்... இவர் அமைச்சரா? அல்லது CEOவா?

  An attendant sprints out of a room adjacent to the imposing office of the finance minister on the first floor of North Block, calling out the name of an official sitting in a cabin across a long corridor and almost knocking down one of several decorative flower-pots placed along the way.
  Company Search
  Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
  Thousands of Goodreturn readers receive our evening newsletter.
  Have you subscribed?

  Find IFSC

  Get Latest News alerts from Tamil Goodreturns

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more