பொருளாதார வீழ்ச்சி பயம்: பெங்களூரில் வீடு விற்பனை 40 சதவீதம் குறைவு

Posted By:
Subscribe to GoodReturns Tamil

பொருளாதார வீழ்ச்சி பயம்: பெங்களூரில் வீடு விற்பனை 40 சதவீதம் குறைவு
பெங்களூர்: கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையான காலிறுதியில் பெங்களூரில் வீடுகள் விற்பனை 40 சதவீதம் குறைந்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் வீடுகள், வீட்டு மனைகளின் விலை விண்ணைத் தொட்டுள்ளது. பெங்களூரில் உள்ள பல்வேறு ஐடி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வீடுகளில் அதிக அளவில் முதலீடு செய்கின்றனர். இதனால் வீடுகளின் விலை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையான காலிறுதியில் பெங்களூரில் வீடுகள் விற்பனை 40 சதவீதம் குறைந்துள்ளது.

இது குறித்து கார்வி என்னும் தரகு நிறுவனம் கூறுகையில்,

தென் பகுதியில் ரியல் எஸ்டேட் விற்பனை பெருமளவு(60-65 சதவீதம்) ஐடி நிறுவன ஊழியர்களை நம்பியே உள்ளது. வீடுகள் விற்பனை வெகுவாகக் குறைந்துள்ளது. கடந்த மார்ச் 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை வீடுகள் விற்பனை 30 யூனிட் குறைந்தது. குறிப்பாக ரூ.80 லட்சம் முதல் ரூ.1.3 கோடி வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள 3 பெட்ரூம் வீடுகள் விற்பனை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார சரிவு வரும் என்ற பயத்தில் ஐடி ஊழியர்கள் உள்ளனர். அதனால் வீடுகள் வாங்குவதில் ஆர்வம் இன்றி உள்ளனர். வீடுகளின் விலையை 10 முதல் 15 சதவீதம் குறைத்தால் தான் 40 சதவீதம் குறைந்துள்ள விற்பனையை சரி செய்ய முடியும். விலையை 10-15 சதவீதம் குறைக்க வேண்டும் என்று வீடு வாங்குபவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர் என்று தெரிவி்ததுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bangalore property sales down by 40 per cent in Q1 | பொருளாதார வீழ்ச்சி பயம்: பெங்களூரில் வீடு விற்பனை 40 சதவீதம் குறைவு

IT professionals are not interested in buying apartments because of recession fear. As a result, residential property sales across Bangalore went down by 40 in april-june quarter.
Story first published: Sunday, August 5, 2012, 12:27 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns