
கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான எம்.வி.தங்ஸ்லே கூறியுள்ளதாவது:
நடப்பு நிதி ஆண்டில் சென்ட்ரல் பாங்க் தனது வர்த்தகத்தில் 20 விழுக்காடு வளர்ச்சி அடைய இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக ஆயிரம் கோடி ரூபாய் முதல் ரூ. 1,200 கோடி வரை கூடுதல் மூலதனமாக வங்கியில் செலுத்த திட்டமிட்டிருக்கிறது.
இதற்காக சுமார் ரூ. 750 கோடி அரசிடமிருந்து பெறப்படும். மீதமுள்ள தொகையை வங்கியே தனது சொந்த நிதியிலிருந்து செலுத்தும். நடப்பு ஆண்டில் கென்யா, துபையில் பிரதிநிதி அலுவலகங்கள் அமைக்கப்பட உள்ளன. மொசாம்பிக்கில் சென்ட்ரல் வங்கிக்கு சொந்தமாக உள்ள நிறுவனத்துடன் இணைந்து செயல்பட பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. வங்கியின் கடன் வழங்குதல் 18 விழுக்காட்டில் இருந்து அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டில் வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ. 4 லட்சம் கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். புதிதாக 250 கிளைகள் திறக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அவர்.


Click it and Unblock the Notifications