.catholic, . baby, .gay.... டொமைன்களுக்கு சவூதி அரேபியா கடும் எதிர்ப்பு

By Mathi
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

.catholic, . baby, .gay.... டொமைன்களுக்கு சவூதி அரேபியா கடும் எதிர்ப்பு
ரியாத்: இணையதள டொமைன் நேம்களில் . catholic, . baby, . gay போன்ற பலவற்றுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று சவூதி அரேபியா கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது.

எந்தெந்த பெயர்களில் டொமைன் நேம்கள் இருக்கக் கூடாது என்று ஒரு பெரிய பட்டியலையும் இது தொடர்பான சர்வதே அமைப்புக்கு சவூதி அரேபியா சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

.com, .co, .uk போன்ற வழக்கமான டொமைன் நேம்கள் இல்லாமல் குறிப்பிட்ட பல சொற்களில் டொமைன் நேம்களை அடுத்த ஆண்டு முதல் அனுமதிக்கலாம் என்று சர்வதேச அமைப்பு முடிவெடுத்திருந்தது. உதாரணமாக வாட்டிகனானது .va என்ற பெயரில் டொமைன் நேம் வைத்திருக்கிறது. ஆனால் தற்போது .catholic என்ற டொமைன் நேம் கேட்டிருக்கிறது. இதற்கு சவூதி அரேபியா கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது. மதம் சார்ந்த விஷயங்களை டொமைன் நேம்களாக பயன்படுத்துவது சரியாக இருக்காது. அதனால் அதனை அனுமதிக்கக் கூடாது என்று கூறியுள்ளது.

இதேபோல் .gay என்ற டொமைனுக்கும் சவூதி கடும் ஆட்சேபனை தெரிவித்திருக்கிறது. இது ஓரினச் சேர்க்கையாளர்களைக் குறிக்கக் கூடியது. உலகின் பல நாடுகள் ஓரினச் சேர்க்கை என்பது தங்களது கலாசாரத்துக்கு எதிரானதாகக் கருதும் நிலையில் இத்தகைய டொமைன்களை அனுமதிக்கக் கூடாது என்று வாதிடுகிறது சவூதி.

மற்றொரு டொமைன் நேம்.. குழந்தைகளுக்கான பொருட்களை தயாரிக்கும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தினர் .baby என்ற டொமைனை பயன்படுத்த விரும்புகின்றனர். சவூதி அரேபியாவோ இதனை ஆபாச இணையதளங்களை இயக்குவோர் பயன்படுத்தக் கூடும் என்று கூறுகிறது.,

இதுமாதிரி இஸ்லாத்துக்கு எதிரான .tatoo, .bar போன்றவையும் சவூதி அரேபியாவின் எதிர்ப்புப் பட்டியலில் இருக்கிறது.

இப்படியே போனால் அடுத்த உலகப் போர் இணையதளங்களில்தான் நடக்குமோ?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Saudi Arabia tries to ban 'offensive' internet domains with words like 'gay', 'sucks', 'wtf'… and 'catholic' | .catholic, . baby, .gay.... டொமைன்களுக்கு சவூதி அரேபியா கடும் எதிர்ப்பு

Saudi Arabia has tried to block a series of requests for new web addresses ending with words like 'gay', 'sucks' and 'catholic'. In a letter sent to ICANN, the body in charge of web addresses, the kingdom claimed some of the suffixes were 'offensive'.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X