இந்தியா-சீனாவுக்கு வேலைவாய்ப்புகள் போவதைத் தடுக்க அமெரிக்கா அதிரடி திட்டம்

Posted By:
Subscribe to GoodReturns Tamil

இந்தியா-சீனாவுக்கு வேலைவாய்ப்புகள் போவதைத் தடுக்க அமெரிக்கா அதிரடி திட்டம்
வாஷிங்டன்: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் வேலைவாய்ப்புகள் போவதைத் தடுக்க புதிய அமைப்பை அமெரிக்க அரசு துவக்கியுள்ளது.

விரைவில் அதிபர் தேர்லை எதிர்நோக்கியுள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

National Additive Manufacturing Innovation Institute (NAMII) என்ற அமைப்பு ஒஹியோ நகரில் அமைக்கப்படும். தனியாருடன் இணைந்து அரசு உருவாக்கும் இந்த அமைப்புக்கு முதல்கட்டமாக 70 மில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் அமெரிக்காவுக்குத் தேவையான உயர் தொழில்நுட்ப உற்பத்திப் பொருட்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுவதை இந்த அமைப்பு உறுதி செய்யும். இந்தப் பணிகள் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போவதை தடுத்து, உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதோடு, நாட்டின் எதிர்கால பொருளாதாரத்தை வலுவாக்க இந்த அமைப்பு உதவும்.

பாதுகாப்புத்துறை, எரிசக்தித்துறை, வர்த்தகத்துறை, தேசிய அறிவியல் அறக்கட்டளை, நாஸா ஆகியவை இணைந்து முதல் கட்டமாக இந்தத் திட்டத்துக்கு 45 மில்லியன் டாலர்களை வழங்கும்.

மேலும் நாடு முழுவதும் 15 புதிய கண்டுபிடிப்பு மையங்களை ஒருங்கிணைத்து உற்பத்தித்துறைக்கு ஊக்கம் தர 1 பில்லியன் செலவிடப்படும் என்று கூறியுள்ளார் ஒபாமா.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

US plans institute of innovation to prevent jobs going to India | இந்தியா-சீனாவுக்கு வேலைவாய்ப்புகள் போவதைத் தடுக்க அமெரிக்கா அதிரடி திட்டம்

The Obama Administration has announced setting up of an institute for manufacturing innovations which will help prevent jobs going to India and China. "This institute will help make sure that manufacturing jobs of tomorrow take root not in places like China or India, but right here in the United States of America," US President Barack Obama said in a statement. "That is how we will put more people back to work and build an economy that lasts," he added. The National Additive Manufacturing Innovation Institute (NAMII), which will be based in Ohio, will be a public-private partnership initiative and has received USD 70 million as the initial financial assistance.
Story first published: Friday, August 17, 2012, 13:05 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns