நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.7 விழுக்காடாக குறையும்: பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு

நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது 7.5 முதல் 7.8 விழுக்காடாக இருக்கும் என்று இதே பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது இது 6.7 விழுக்காடாக குறையும் என்று கூறியிருக்கிறது.
கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2011 அக்டோபர் வரையில் முக்கிய கடன்களுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி 13 முறை உயர்த்தியது. இதனால் தொழில்துறை நிறுவனங்கள் விரிவாக்கத்தை மேற்கொள்ளவில்லை. இது நாட்டின் பொருளாதார விழுக்காட்டில் எதிரொலித்தது. இதான்ல் பொருளாதர விழுக்காடானது 6.5 ஆக குறைந்து போயுள்ளது.
கடந்த 2009-10, 2010-11 ஆண்டுகளில் 8.4 விழுக்காடாக பொருளாதார வளர்ச்சி இருந்தது. 2005-06, 2006-07 மற்றும் 2007-08 ஆகிய ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 விழுக்காட்டுக்கும் அதிகமாக இருந்தது


Click it and Unblock the Notifications