விலைவாசி உயர்ந்தால் விவசாயிகளுக்கு நல்லதுதானே... மத்திய அமைச்சர்!

Posted By:
Subscribe to GoodReturns Tamil

விலைவாசி உயர்ந்தால் விவசாயிகளுக்கு நல்லதுதானே... மத்திய அமைச்சர்!
பாரபங்கி (உ.பி): நாட்டில் விலைவாசி உயர்ந்து வருவது குறித்து நான் கவலைப்படவில்லை. காரணம், இதனால் விவசாயிகளுக்கு பலன் கிடைத்து வருகிறது என்பதை நாம் மறந்து விடக் கூடாது என்று மத்திய அமைச்சர் பேனி பிரசாத் வர்மா கூறியுள்ளார்.

மேலும் பணவீக்கமும் நல்லதுதான் என்றும் அவர் பேசியுள்ளதால் சர்ச்சை கிளம்பியுள்ளது.

உ.பி. மாநிலம் பாரபங்கியில் செய்தியாளர்களிடம் பேசிய பேனி பிரசாத் வர்மா கூறுகையில், பெருகி வரும் விலைவாசியால் நான் வருத்தப்படவில்லை. மாறாக மகிழ்ச்சி அடைகிறேன். உணவுப் பொருட்களின் விலை உயர்வு விவசாயிகளுக்கு பலன் அளித்து வருகிறது. இதை நாம் மறந்து விடக் கூடாது.

மேலும் பணவீக்கமும் உயர்ந்து வருவது நல்லதுதான். இதனாலும் விவசாயிகள் பலனடைகிறார்கள். பருப்பு, கோதுமை, ரவை, காய்கறிகளின் விலை உயர்ந்தால் சந்தோஷம்தான். அது விவசாயிகளுக்கு நல்ல பலனையே தரும். எனவே பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு குறித்து நான் கவலைப்படவில்லை என்றார் பிரசாத்.

அவரது இந்தப் பேச்சுக்கு பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

I am happy with rising prices: Beni Prasad Verma | விலைவாசி உயர்ந்தால் விவசாயிகளுக்கு நல்லதுதானே... மத்திய அமைச்சர்!

Union minister Beni Prasad Verma was today at the centre of a controversy with remarks that he was "happy" over rising prices of food items as it will benefit farmers, evoking a sharp attack from BJP and other parties. "Dal, atta, rice and vegetables have become expensive. The more the prices, the better it is for farmers. I am happy with this inflation," the Union Steel Minister told.
Story first published: Monday, August 20, 2012, 12:47 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns