
கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு கம்ப்யூட்டர் விற்பனை 29 லட்சமாக உயர்ந்துள்ளது.
இது குறித்து கார்ட்னர் நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில், நிறுவனங்களும் கம்ப்யூட்டர்கள் விற்பனையை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
கடந்த ஆண்டில் நான்காவது இடத்தில் இருந்த சீனாவின் லெனோவா நிறுவனம், நடப்பு ஆண்டில் முதல் காலாண்டில், மொத்த கம்ப்யூட்டர்கள் விற்பனையில் 16.6 சதவீததைப் பிடித்து முதலிடத்துக்கு வந்துள்ளது.
சர்வதேச அளவில் கம்ப்யூட்டர்கள் விற்பனையில் இந்த நிறுவனம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
அதே போல இந்தியாவில் மொத்த கம்ப்யூட்டர்கள் விற்பனையில் 13.4 சதவீதம் ஏசெர் நிறுவன கம்ப்யூட்டர்களே விற்கின்றன.
மூன்றாவது இடத்தில் உள்ள எச்.பி. நிறுவனத்தின் பங்களிப்பு 13.1 சதவீதமாக உள்ளது.
கடந்த ஆண்டின் ஜுன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் கம்ப்யூட்டர்கள் விற்பனையில் டெல் நிறுவனம் முதலிடத்தில் இருந்தது. அப்போது மொத்த கம்ப்யூட்டர்கள் விற்பனையில் இந்த நிறுவனத்தின் பங்களிப்பு 16.7 சதவீதமாக இருந்தது.
ஆனால், நடப்பு 2012 மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த முதல் காலாண்டில் இந்நிறுவனம் இரண்டாவது இடத்திற்கு சென்றது. தற்போது 4வது இடத்தில் உள்ளது. கம்ப்யூட்டர்கள் விற்பனை சந்தையில் இந்த நிறுவனத்தின் பங்கு 12.9 சதவீதமாக உள்ளது.
இந் நிலையில் 2012ம் ஆண்டில் கம்ப்யூட்டர்கள் விற்பனை 8.4 சதவீதம் மட்டுமே உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி புரியும் கல்லூரிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு இலவச லேப்டாப்களை அரசு வழங்கி வருகிறது. இதனால் கூடுதலாக 9.20 லட்சம் கம்ப்யூட்டர்கள் விற்பனையாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications