
கூகுள் நிறுவனத்தின் துணை தலைவராக இருந்த மரிசா மேயர் கடந்த ஜூலை மாதம் யாஹூ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார். யாஹூ நிறுவனத்தின் தலைமை விற்பனை அதிகாரி மாலி ஸ்பில்மேன் விடுப்பில் உள்ளார். இந்த நேரத்தில் மேயர் ஸ்பில்மேனை அந்த பதிவியில் இருந்து நீக்கிவிட்டு தனது தோழி கேத்தி சவிட் என்பவரை அந்த இடத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
கேத்தி லாக்கர்ஸ் என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. யாஹூவின் இடைக்கால தலைமை செயல் அதிகாரியாக இருந்த ராஸ் லெவின்சானால் நியமிக்கப்பட்ட ஸ்பில்மேன் கடற்கரையில் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தபோது அவரை செல்போனில் தொடர்பு கொண்டு பதவி பறிபோனதை மேயர் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து இந்த நிறுவனத்திலேயே பணியாற்றுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆனால் ஸ்பில்மேன் அங்கேயே தொடர்ந்து வேலை பார்ப்பாரா என்பது தெரியவில்லை.


Click it and Unblock the Notifications