தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3வது முறையாக தீ விபத்து: அதிர்ச்சியில் அதிகாரிகள்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தூத்துக்கு‌டி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மூன்றாவது முறையாக தீவிபத்து ஏற்பட்டுள்ளது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் கன்வேயர் பெல்ட்களின் மூலம் கொண்டு செல்லப்படும் நிலக்கரி, அரவை இயந்திரங்களின் மூலம் தேவையான அளவிற்கு மாற்றப்படுகி்றது. இந்நிலையில் இன்று நண்பகல் 12 மணி அளவில் அரவை இயந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவினால் கன்வேயர் பெல்ட் தீப்பிடித்தது. தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் போராடி வருகின்றனர்.

மூன்றாவது முறையாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது அதிகாரிகளை அதிர்சசியடைய வைத்துள்ளது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தொடர்ந்து கன்வேயர் பெல்ட்களில் தீவிபத்து ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக இந்த தீ விபத்து நடந்ததா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

 

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் அவ்வப்போது தீ விபத்துகள் ஏற்படுவதும், தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படுவதும் தொடர்கதையாகிவிட்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Yet another fire accident in Tuticorin thermal power station | தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3வது முறையாக தீ விபத்து

Yet another fire accident happened at Tuticorin thermal power station on monday. Fire department is struggling to douse the fire in the conveyor belt.
Story first published: Monday, September 3, 2012, 16:24 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X