சர்க்கரை மீதான அரசின் கட்டுப்பாட்டை முழுமையாக கைவிட ரங்கராஜன் குழு பரிந்துரை

By Mathi
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்க்கரை மீதான கட்டுப்பாட்டை முழுமையாக கைவிட ரங்கராஜன் குழு பரிந்துரை
டெல்லி: சர்க்கரை மீதான அரசின் கட்டுப்பாட்டுகளை முழுமையாக கைவிடுவது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ரங்கராஜன் குழு பரிந்துரைத்துள்ளது.

 

சர்க்கரை ஏற்றுமதி- இறக்குமதி, வெளிச்சந்தையில் சர்க்கரை விற்பனை, சர்க்கரை விவசாயிகளுக்கான விலை நிர்ணயம் உள்ளிட்டவை தொடர்பான அரசின் கட்டுப்பாட்டுகளை தளர்த்துவது தொடர்பாக பிரதமருக்கு ஆலோசனை வழங்க ரங்கராஜன் குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவில் முன்னாள் பொருளாதார ஆலோசகர் கெளசிக் பாசு, மத்திய அரசு செயர்கள் அசோக் குலாடி, கேபி கிருஷ்ணன் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.

இக்குழு தமது பரிந்துரைகளை மத்திய அரசிடம் அளித்திருக்கிறது. உணவுத்துறை அமைச்சகத்துக்கும் கடந்த வாரம் இந்த அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.

இதன் மூலம் எந்த சர்க்கரை ஆலையிலும் தங்களது கரும்பை விற்பனை செய்து கொள்ள முடியும் என்ற நிலை உருவாகும். மேலும் சர்க்கரை ஆலைகளுக்கு இடையே 15 கிலோ மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் தளர்த்த பரிந்துரைக்கபப்ட்டுள்ளது.

சர்க்கரை விலை நிர்ணயத்திலும் இதுவரை இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தபப்ட்டுள்ளன. ஆனால் இப்படி அரசின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதற்கு உத்திரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் அண்மையில் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.

நியாயவிலை கடைகளுக்கான சர்க்கரையை திறந்தவெளி சந்தையில் தான் மாநில அரசு வாங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் இதில் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவில் சர்க்கரை மீதான அரசின் கட்டுப்பாட்டுகளை தளர்த்துவது என்பது 1970களிலிருந்தே தொடங்கியது. ஆனால் அது நடைமுறைப்படுத்தவில்லை. எஃகு மற்றும் சிமெண்ட் துறைகளின் மீதும் இப்படியான கட்டுப்பாடுகள் கைவிடப்பட்டிருக்கின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rangarajan panel for total decontrol of sugar industry | சர்க்கரை மீதான கட்டுப்பாட்டை முழுமையாக கைவிட ரங்கராஜன் குழு பரிந்துரை

The Rangarajan Committee, set up earlier this year by the prime minsiter’s office (PMO), has recommended total decontrol of the sugar industry by doing away with the levy sugar obligation, release mechanism and freeing of export-import. While recommending the Centre’s Fair and Remunerative price (FRP) as the base price for sugarcane, the panel has suggested a profit-sharing mechanism so that farmers, too, benefit from higher sugar prices.
Story first published: Tuesday, September 4, 2012, 15:04 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more