அரசு பஸ்களில் டிக்கெட் முன்பதிவு காலம் 60 நாட்களாக நீட்டிப்பு: அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு

Posted By:
Subscribe to GoodReturns Tamil

அரசு பஸ்களில் டிக்கெட் முன்பதிவு காலம் 60 நாட்களாக நீட்டிப்பு!
சென்னை: பயணிகளை நலனை கருத்தில் கொண்டு அரசு பஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும் காலம் 30 நாட்களுக்கு பதிலாக 60 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை தற்போது நடைமுறையில் உள்ள 30 நாட்களில் இருந்து, நேற்று முதல் 60 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் பயணிகள் தங்கள் முன்பதிவை 60 நாட்களுக்கு முன்னதாகவே முன்பதிவு செய்து கொள்ளலாம்.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வசிக்கும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு சென்னையில் இருந்து புறப்படும் பஸ்களுக்கு முன்பதிவு மூலம் பெருங்களத்தூர் மற்றும் மேல்மருவத்தூர் ஆகிய இடங்களில் ஏறும் வசதி 4.9.2012 (நேற்று) முதல் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. இதனால் புறநகர் பகுதியில் வசிக்கும் முன்பதிவு செய்த பயணிகள் இனிவரும் காலங்களில் கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு செல்ல தேவையில்லை.

சென்னை மற்றும் அனைத்து மாவட்டங்களிலும், முக்கிய நகரங்களிலும் பயணிகள் முன்பதிவு செய்ய தற்போது இயங்கி வரும் 50 முன்பதிவு மையங்கள், வருங்காலங்களில் 300 மையங்களாக அதிகரிக்கப்படும்.

பயணிகள் இணையதளம் (www.tnstc.in) வழியாகவும் மற்றும் செல்போன் மூலமாகவும் (மொபைல் டிக்கெட்டிங்) 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் மூலம் அனைத்து தமிழ்நாடு போக்குவரத்துக்கழக நெடுந்தூர பேருந்துகளுக்கும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Government buses booking duration extended to 60 days: TNSTC | அரசு பஸ்களில் டிக்கெட் முன்பதிவு காலம் 60 நாட்களாக நீட்டிப்பு!

TNSTC has extended the duration for ticket booking from 30 days to 60 days. Now bus passengers can book their tickets earlier.
Story first published: Wednesday, September 5, 2012, 10:41 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns