எரிபொருள் விலை அதிகரிப்பு- விமான பயண கட்டண உயர்வால் பயணிகள் எண்ணிக்கை மேலும் சரிகிறது!

உள்நாட்டு விமான சேவையில் ரூ150 முதல் ரூ250ம் சர்வதேச வழித்தடத்தில் ரூ825ம் உயர்த்தப்பட்டிருக்கிறது.
விமான எரிபொருள் விலையை பொதுத்துறை நிறுவனங்கள் கடந்த 1-ந் தேதி 7.6 விழுக்காடு அதிகரித்தது. கடந்த 2 மாதங்களில் 4-வது முறையாக விமான எரிபொருள் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி ஆயிரம் லிட்டர் எரிபொருள் விலை ரூ72, 282 ஆகும். விமான சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் எரிபொருளுக்காக மட்டும் 50 விழுக்காடு செலவு செய்யும் நிலையில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய விமான பயண கட்டண அதிகரிப்பால் உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை மேலும் சரிவை சந்திக்கும் நிலை உள்ளது.
கடந்த 7ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உள்நாட்டு சேவையில் விமான பயணிகள் எண்ணிக்கையானது ஜூலை மாதம் 10 விழுக்காடு சரிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications