உள்நாட்டில் சுரங்கங்களை தனியாருக்கு கொடுத்து வெளிநாட்டில் நிலக்கரிக்காக கையேந்தும் மத்திய அரசு

By Mathi
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: சுரங்கங்களை தனியாருக்கு தாரை வார்த்து விட்டு நிலக்கரிக்காக வெளிநாட்டில் மத்திய அரசு கையேந்திய சம்பவம் அம்பலமாகியுள்ளது

 

இந்தியாவில் தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடையும் வகையில் சுரங்கங்கள் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டுள்ளன.

 

இந்திய நிலக்கரி நிறுவனமானது கடந்த 4 ஆண்டுகளாக நிலக்கரி அமைச்சகத்துக்கு நில்க்கரி கையிருப்பு பற்றி கடிதம் எழுதி வந்தது. எதிர்கால தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு மேலும் 130 சுரங்க உரிமங்கள் வழங்கப்பட வேண்டும் என்று கடிதங்களில் வலியுறுத்தியது. ஆனால் நிலக்கரி அமைச்சகம் இதை கண்டுகொள்ளவில்லை. இப்போது ஊழல் பிரச்சினை எழுந்த பிறகுதான், நிலக்கரி அமைச்சகம் விழித்துக் கொண்டுள்ளது தனியாருக்கு சுரஙகங்கள் தாரை வார்க்கப்பட்டதால் பொதுத்துறை நிறுவனங்கள் செய்து கொண்ட ஒப்பந்தங்களளுக்காக வெளிநாடுகளில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

தென் ஆப்பிரிக்காவில் மொஸாம்பிக்கில், நிலக்கரி வளங்களை கண்டறியவும், வெட்டி எடுக்கவும், இந்திய நிலக்கரி நிறுவனத்தின் துணை நிறுவனமாக கோல் இந்தியா ஆப்ரிக்கானா லிமிடெட் என்ற நிறுவனத்தை மத்திய அரசு தொடங்கியது. இந்த நிறுவனத்தை நிர்வகிக்க இந்திய நிலக்கரி நிறுவனத்தைச் சேர்ந்த 4 அதிகாரிகள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மொஸாம்பிக்கை விட்டு சற்று தொலைவில் அமைந்துள்ள எட்டோ என்ற நகரத்தில் இந்த நிறுவனத்தின் அலுவலகம் மார்ச் மாதம் தொடங்கப்பட்டது.இந்த நகரம் ஜம்பேஸி நதிக்கரையில் அமைந்திருக்கிறது. சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆராயவும், சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டத்தை தயாரிக்கவும் ஆலோசகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். சுரங்கத்தில் இருந்து நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்க உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Coalgate: Coal blocks for private firms, CIL sent to Africa | தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டட்தால் நிலக்கரிக்காக வெளிநாட்டில் கையேந்திய மத்திய அரசு

State-run Coal India Limited's pleas for coal blocks may have fallen on deaf ears but the government did not hesitate in asking the Maharatna company to go as far overseas as Mozambique in south-east Africa to prospect for coal
Story first published: Thursday, September 6, 2012, 17:30 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X