உலக வங்கி தலைமைப் பொருளாதார வல்லுநராக இந்தியாவின் கெளசிக் பாசு

Posted By:
Subscribe to GoodReturns Tamil

உலக வங்கியின் தலைமை பொருளாதார வல்லுநராக கெளசிக் பாசு நியமிக்கப்பட்டுள்ளார்.

உலக வங்கியின் தலைமைப் பொருளாதார வல்லுநராக இருக்கும் சீனாவின் ஜஸ்டின் லினின் பதவிக் காலம் ஜூன் 1-ந் தேதியுடன் முடிவடைந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

லண்டனில் பொருளாதாரத்தில் பி.எச்டி. பட்ட பெற்ற பாசு நியூயார்க்கில் பேராசிரியராகப் பணியாற்றினார். பின்னர் டெல்லி திரும்பி, பொருளாதாரம் தொடர்பாக ஆய்வு மையம் ஒன்றை நிறுவினார். மத்திய நிதி அமைச்சகத்தில் தலைமை பொருளாதார ஆலோசகராகவும் அவர் பணியாற்றினார். அவரது பதவிக் காலம் கடந்த ஜூலை மாதத்துடன் முடிவைடந்தது. இந்நிலையில் உலக வங்கியின் தலைமை பொருளாதார வல்லுநராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் அக்டோபர் மாதம் முதல் உலக வங்கியின் தலைவரான ஜிம் யோங்கிம் கீழ் தலைமை பொருளாதார வல்லுநராக தமது பணியை கெளசிக் பாசு தொடங்க உள்ளார்.

கெளசிக் பற்றி கருத்து தெரிவித்துள்ள கிம், வளர்ந்து வரும் நாட்டிலிருந்து உலக வங்கிக்கு வரும் அவர் இந்நிறுவனத்தின் பெரும் மதிப்புமிக்க சொத்தாக இருப்பார் என்று கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Kaushik Basu appointed World Bank chief economist | உலக வங்கி தலைமைப் பொருளாதார வல்லுநராக கெளசிக் பாசு

The World Bank on Wednesday named Kaushik Basu as its chief economist, placing a candidate from an emerging market country in a key position at the global development lender.
Story first published: Thursday, September 6, 2012, 17:55 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns