இந்தியாவின் சிறிய சாப்ட்வேர் நிறுவனங்களின் அசுர வளர்ச்சி!

Posted By:
Subscribe to GoodReturns Tamil

இந்தியாவின் சிறிய சாப்ட்வேர் நிறுவனங்களின் அசுர வளர்ச்சி!
பெங்களூர்: இந்தியாவில் சமீப காலமாக பெரிய சாப்டேவர் நிறுவனங்களை விட சிறிய நிறுவனங்கள் மிக அதிகமான வளர்ச்சியை அடைந்து வருகின்றன.

குறிப்பாக சர்வதேச அளவில் நிலவும் பொருளாதாரத் தேக்கத்தால் பெரிய நிறுவனங்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இரண்டாம் நிலையில் உள்ள நிறுவனங்களும் சிறிய நிறுவனங்களும் சக்கை போடு போட்டு வருகின்றன.

மைன்ட் ட்ரீ, கேபிஐடி குமின்ஸ், இ கிளர்க், பெர்சிஸ்டென்ட் சிஸ்டெம்ஸ், போலாரிஸ், ஹெக்ஸாவேர், இன்போடெக், இன்போஎட்ஜ், ஜியோமெட்ரிக், என்ஐஐடி டெக், சிஎம்சி, ஸென்சார் போன்ற நிறுவனங்கள் கடந்த ஓராண்டில் 20 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளன.

இதில் கேபிஐடி குமின்ஸ் கடந்த நிதியாண்டில் மட்டும் தனது வருவாயை 88 சதவீதம் அதிகரித்து ரூ. 538 கோடி ஈட்டியுள்ளது.

ஹெக்ஸாவேர் நிறுவனத்தின் வருவாய் 37 சதவீதம் அதிகரித்து ரூ. 438 கோடியையும், பெர்சிஸ்டென்ட் சிஸ்டம்ஸ் வருவாய் 34 சதவீதம் அதிகமாகி ரூ. 301 கோடியையும் தொட்டுள்ளது.

இந்த நிறுவனங்கள் தங்களது சேவைகளை சில குறிப்பிட்ட துறைகளில் குவித்தது தான் இந்த வளர்ச்சிக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது. ஹெக்ஸாவேர், என்ஐஐடி டெக் ஆகியவை பயணம் மற்றும் அது சார்ந்த தொழில்துறைகளின் வர்த்தகத்துக்கு உதவும் சாப்ட்வேர்களை உருவாக்குவதிலும், மைன்ட்ட்ரீ கேபிஐடி குமின்ஸ் போன்றவை ஆட்டோமொபல் துறைக்கான சாப்ட்வேர்களையும் சேவைகளையும் வழங்குவதில் தான் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Mid-tier IT companies like MindTree, Persistent Systems, Polaris grow faster than biggies | இந்தியாவின் சிறிய சாப்ட்வேர் நிறுவனங்களின் அசுர வளர்ச்சி!

Mid-tier Indian IT firms have been doing as well or better than their top-tier counterparts in recent times. Normally in a downturn, the mid-tier segment tends to be more adversely impacted because customers who are still able to spend on IT prefer the safety of the more established players. But that's not the case now. In fact, the only exception in recent times was the global recession year of 2009-10, when mid-tier firms performed worse than top-tier ones.
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns