
டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் உரிமையாளராக டெக்கான் குரோனிக்கல் நாளேடு இருந்து வந்தது. கடந்த ஐ.பி.எல். போட்டியில் படு சொதப்பலாக டெக்கான் சார்ஜர்ஜ்ஸ் விளையாடி வந்தது. இந்நிலையில் இந்த அணியை விற்பனை செய்யப் போவதாக டெக்கான் குரோனிக்கல் அறிவித்தது. இதனால் டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் புதிய ஓனர் யார் என்ற பரபரப்பு உருவாகி உள்ளது.
சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தில் சிஇஓவாக இருந்த ஸ்ரீனிராஜூ, பெப்புல் கேப்பிடல் நிறுவனத்தின் இணை நிறுவனராக இருந்து வருகிறார். இவரது பெயர் உட்பட பலரது பெயரும் புதிய உரிமையாளராக இருக்கக் கூடும் என்ற யூகப்பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.
அதே நேரத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் நிறுவனத்தை விற்பனை செய்வது என்பது அவ்வளவு எளிதானதாக இருக்காது என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் ஐசிஐசி, ஐஎப்சிஐ, ஆக்சிஸ் வங்கி, டாடா கேபிட்டல் என 28 நிறுவனங்கள் ரூ3 ஆயிரம் கோடியை டெக்கான் குரோனிக்கல் நிறுவனத்துக்கு கடனாக கொடுத்திருக்கின்றன.
இதேபோல் டெக்கான் குரோனிக்கல் நிறுவனத்தின் பங்குதாரர்களிடமும் முழுமையாக ஒப்புதல் பெற வேண்டியதும் இருக்கிறது. இந்த நடைமுறையே சில மாதங்கள் நடைபெறக் கூடும். கடனை திருப்பிச் செலுத்தும் நடைமுறையும் குறிப்பிட்ட காலத்துக்கு நீடிக்கும் என்று சுட்டிக்காடுகின்றனர்.


Click it and Unblock the Notifications