பெட்ரோல், டீசல், கேஸ் விலை.. மத்திய அமைச்சரவை கூட்டம் திடீர் ரத்து

Posted By:
Subscribe to GoodReturns Tamil

பெட்ரோல், டீசல், கேஸ் விலை.. மத்திய அமைச்சரவை கூட்டம் திடீர் ரத்து
டெல்லி: எண்ணெய் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெணெய் விலை உயர்வுக்கான அறிவிப்பு இன்று வெளியாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக விவாதிக்க இருந்த மத்திய அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சர்கள் குழுக் கூட்டம் திடீரென ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது.

2011-ம் ஆண்டுக்கு ஜூன் மாதத்துக்குப் பிறகு டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலை உயர்த்தப்படவில்லை. உற்பத்தி செலவு 28 விழுக்காடு அதிகரித்தும் விலை உயர்த்தப்படாததால் பெரும் நட்டத்தில் இயங்குகிறோம் என்பது இந்திய எண்ணெய் நிறுவனங்களின் கருத்து.

இதனால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலை உயரும் என்று கூறப்பட்டது. ஆனால் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வந்ததால் விலை உயர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிடவில்லை.

இருப்பினும் பெட்ரோலிய அமைச்சகமும் நிதி அமைச்சகமும் விலை உயர்வுக்கு ஒப்புதல் கொடுத்திருந்தன. இந்நிலையில் டெல்லியில் இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் கூட உள்ள அரசியல் விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து விலை உயர்வுக்கான அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறப்பட்டது. ஆனால், திடீரென இந்தக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது.

இந் நிலையில் பெட்ரோலிய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி இன்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்து பேசிய பின் செய்தியாளர்களிடன் பேசுகையில், பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு தவிர்க்க முடியாது என்றார்.

ஆக.. இன்று இல்லாவிட்டாலும் நாளைக்கு இல்லாவிட்டாலும் எப்படியும் நாட்டு மக்கள் தலையில் இடி விழுவது உறுதி!

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.4 முதல் 5 வரையும் சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.50 வரையும் உயரலாம் என்கிறார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Diesel, LPG, kerosene prices likely to be hiked today | பெட்ரோல், டீசல், கேஸ் விலை.. மத்திய அமைச்சரவை கூட்டம் திடீர் ரத்து

The Cabinet Committee on Political Affairs (CCPA) may take decision to hike petrol, diesel, cooking gas and kerosene prices simultaneously in its scheduled meeting later on Tuesday.
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns