சென்னை ஐஐடியில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒரு பேராசிரியர் கூட இல்லை!

Posted By:
Subscribe to GoodReturns Tamil

சென்னை ஐஐடியில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒரு பேராசிரியர் கூட இல்லை!
டெல்லி: சென்னை ஐஐடியில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட பேராசிரியராக இல்லை என்பது தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

இந்த கல்வி மையத்தில் மொத்தம் 212 பேராசிரியர்களும், 91 இணைப் பேராசிரியர்களும், 177 துணைப் பேராசிரியர்களும் உள்ளனர்.

ஆனால், இதில் ஒருவர் கூட பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை. அதே போல தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வெறும் 3 பேர் தான் பேராசிரியர்களாகவும், 3 பேர் தான் இணைப் பேராசிரியர்களாகவும், 4 பேர் மட்டுமே துணைப் பேராசிரியர்களாகவும் உள்ளனர்.

பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த ஒரே ஒருவர் மட்டுமே துணைப் பேராசிரியராக உள்ளார்.

பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட பேராசிரியராக இல்லை என்பது மட்டுமல்ல, இணைப் பேராசிரியராகக் கூட இல்லை. ஆனால், துணைப் பேராசிரியர்கள் பதவியில் மட்டும் 7 பேர் உள்ளனர்.

ஐஐடிக்களில் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு இல்லாததே இதற்குக் காரணமாகும். துணைப் பேராசிரியர் பதவிக்கான தேர்வில் மட்டுமே இட ஒதுக்கீடு உள்ளது. இதனால் தான் இந்தப் பதவிக்காவது பிற்படுத்தப்பட்டவர்கள் வர முடிந்துள்ளதாகத் தெரிகிறது.

இதே நிலைமை தான் ஐஐடி காரக்பூர், ஐஐடி காந்திநகர், ஐஐடி ரூர்கி, ஐஐடி ரோபர் என பல இடங்களிலும் நிலவுகிறது.

ஐஐடி ஹைதராபாதில் மட்டுமே 22 பிற்படுத்தப்பட்டவர்கள் பேராசிரியர்களாக உள்ளனர்.

இந்தத் தகவல்களை தகவல் பெறும் சட்டத்தின் கீழ் மகேந்திர பிரதாப் சிங் என்பவர் திரட்டியுள்ளார். ஐஐடி டெல்லி, ஐஐடி மும்பை ஆகியவை இவருக்கு இன்னும் பதிலைத் தரவில்லை. தந்தால் தான் அதன் வண்டவாளம் தெரியவரும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Quotas fail to break caste ceiling in IITs | சென்னை ஐஐடியில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒரு பேராசிரியர் கூட இல்லை!

If SCs/STs are abysmally under-represented as faculty members in central universities despite the stated policy of reservation in promotion, their presence in premier IITs is equally marginal. That there is no quota in promotion in IITs makes it even worse, leaving little room for them to occupy senior positions. IITs have reservation only at the entry level of assistant professor. IIT-Madras, among the best in its ilk, has three SC professors, three associate professors and four assistant professors. Again, STs are unrepresented in two categories. A lone ST is assistant professor. Even OBCs are not there at the level of professor and associate professor, but there are seven assistant professors. Considering that Tamil Nadu has been the hotbed of social movement, under-representation of marginal castes and STs is intriguing. From the general category there are 212 professors, 91 associate professors and 177 assistant professors.
Story first published: Wednesday, September 12, 2012, 15:55 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns