4 நிலக்கரி சுரங்கங்களுக்கான ஒதுக்கீடு ரத்து

By Mathi
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: அமைச்சகங்களுக்கிடையிலான குழுவின் பரிந்துரையை ஏற்று 4 நிலக்கரி சுரங்கங்க ஒதுக்கீட்டை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய தலைமை கணக்கு தணிக்கை குழு அளித்த அறிக்கை, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளை ஆய்வு செய்ய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் அமைச்சகங்களுக்கிடையிலான குழு அமைக்கப்பட்டது. ஒதுக்கீடு பெற்று, குறிப்பிட்ட காலத்துக்கு பிறகும் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியை தொடங்காத 58 நிலக்கரி சுரங்கங்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது. இதில் 29 ஒதுக்கீடுகளை அமைச்சகக் குழு. ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது. இவற்றில் 5 நிறுவனங்கள் பெற்ற 8 ஒதுக்கீடுகள் குறித்து பல மணி நேரம் ஆய்வு செய்தது. இதன் பின்னர் 4 சுரங்க ஒதுக்கீடுகளை ரத்து செய்ய அமைச்சகங்களுக்கு இடையேயான குழு பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரைகளை ஏற்று நிலக்கரி சுரங்க அமைச்சகம் உடனடியாக 4 சுரங்க ஒதுக்கீடுகளை ரத்து செய்துள்ளது. இ

 

மேலும் இன்று 10 நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் குறித்து அமைச்சகங்களுக்கு இடையேயான குழு ஆய்வு செய்ய உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

4 coal blocks de-allocated; Ministerial group to meet again today | 4 நிலக்கரி சுரங்கங்களுக்கான ஒதுக்கீடு ரத்து

Three little-known private companies are the first casualties of the coal block allocation scam. Based on the recommendations of an inter-ministerial group (IMG), the Coal Ministry today de-allocated four coal blocks, and encashed/issued warnings on the bank guarantees of two companies.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X