
டெல்லியில் நேற்று கூடி ஆலோசனை நடத்திய அமைச்சகங்களுக்கு இடையேயன குழு பூஷன் ஸ்டீல் மற்றும் எஸ்கேஎஸ் இஸ்பாட் அண்ட் பவர் ஆகிய நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட உரிமங்களை ரத்து செய்ய பரிந்துரைத்துள்ளது.
பூஷன் ஸ்டீல் நிறுவனத்துக்கு ஒடிஷாவில் 2006-ம் ஆண்டு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. மொத்தம் 316.09 மில்லியன் டன் நிலக்கரி வெட்டி எடுக்க அனுமதிக்கப்பட்டது. இந்த நிறுவனம் பற்றியும் கணக்குத் தணிக்கை அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.
மற்றொரு நிறுவனமான எஸ்கேஎஸ் இஸ்பாட் நிறுவனத்தில் மத்திய அமைச்சர் சுபோத்காந்த் சகாயின் சகோதர் கெளரவ இயக்குநராக இருப்பதும் தெரியவந்துள்ளது.
ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்துடன் இணைந்த ஏபிசி மைன் நிறுவனத்தின் உரிமத்தையும் ரத்து செய்ய அமைச்சகங்களுக்கு இடையேயான குழு பரிந்துரைத்துள்ளது.
நாளை 6 நிறுவனங்கள் பற்றி ஆய்வு?
இதுவரை மொத்தம் 7 நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் நிலையில் மேலும் 6 நிறுவனங்கள் பற்றி நாளை அமைச்சகங்களுக்கு இடையேயான குழு ஆய்வு செய்கிறது. அனேகமாக இந்த 6 நிறுவனங்களின் உரிமங்களும் ரத்து செய்யப்பட வாய்ப்பிருக்கிறது.


Click it and Unblock the Notifications