அந்தமான்-நிக்கோபார் தீவுகளின் போக்குவரத்திற்கு 2 புதிய கப்பல்கள் வாங்கப்படும்: ஜி.கே.வாசன்

Posted By:
Subscribe to GoodReturns Tamil

சென்னை: அந்தமான்-நிக்கோபார் தீவுகளுக்கு இடையிலான போக்குவரத்திற்கு ரூ.400 கோடி மதிப்பிலான 500 பேர் பயணிக்கும் வசதி கொண்ட 2 கப்பல்களை வாங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

அந்தமானில் உள்ள போர்ட் பிளேயரின் லட்ஷதீப் துறைமுகப் பணிகளுக்காக புதிய அலுவலக வளாகத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் கப்பல் துறை அமைச்சக செயலாளர் பி.கே.சின்ஹா, அந்தமான்-நிக்கோபார் தீவுகளின் தலைமை செயலாளர் ஆனந்த் பிரகாஷ், முதன்மை செயலாளர் ஜால்ஸ் ஸ்ரீவாஸ்தவ் ஆகியோர் கலந்து கொண்டனர். மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் விழாவிற்கு தலைமை தாங்கி, புதிய அலுவலக வளாகத்தை திறந்து வைத்தார்.

விழாவில் பேசிய ஜி.கே.வாசன், அந்தமான்-நிக்கோபார் தீவுகளுக்கு இடையிலான போக்குவரத்திற்காக ரூ.400 கோடி மதிப்பிலான 2 புதிய கப்பல்களை வாங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

இந்திய கப்பல் துறை அமைச்சகத்தின் கீழ் கடந்த 1956ம் ஆண்டு அந்தமான் லட்ஷதீப் துறைமுகப் பணிகள் நிறுவப்பட்டது. ஆனால் சுனாமி பாதிப்பில் சிக்கிய அந்தமான்-நிக்கோபார் தீவுகளில் துறைமுகம் மற்றும் படகு துறைகள் கடும் சேதமடைந்துள்ளன. மேலும் தீவுகளுக்கு இடையிலான போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் கப்பல்களும், படகுகள் நாள்பட்டதாகிவிட்டது.

எனவே தீவுகளின் கப்பல் மற்றும் படகு சேவையை புதுப்பிக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. அக்குழுவினர், 1200 நபர்களை ஏற்றி செல்லும் திறன் கொண்ட 4 கப்பல்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்தது. மேலும் தீவுகளின் உள்பகுதிகளில் பயணிகள் போக்குவரத்திற்காக 500 பயணிகளை ஏற்றி செல்லும் திறன் கொண்ட 4 கப்பல்களை வாங்கவும் பரிந்துரை செய்தது.

இதில் ரூ.400 கோடி மதிப்பிலான 500 பயணிகளை ஏற்றி செல்லும் திறன் கொண்ட 2 கப்பல்களை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வரும் 2014ம் ஆண்டு முடிவில் இந்த 2 கப்பல்களும் பயன்பட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வான் வழி மற்றும் கடல்வழி மார்க்கங்களில் அதிக போக்குவரத்து வசதிகளை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 2020ம் ஆண்டிற்குள் நாட்டின் கப்பல் போக்குவரத்து துறையில் பெரும் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்றார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

2 new passenger ships to be bought for Andaman and Nicobar Islands: G.K.Vasan | அந்தமான்-நிக்கோபார் தீவுகளின் போக்குவரத்திற்கு 2 புதிய கப்பல்கள் வாங்கப்படும்: ஜி.கே.வாசன்

The Shipping Ministry has accorded approval for two passenger ships of 500 passengers capacity at the cost of Rs.400 crore for remote Andaman and Nicobar Islands, the Union Shipping Minister G.K. Vasan said.
Story first published: Monday, September 17, 2012, 11:03 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns