மும்பை: மத்திய அரசின் அடுத்தடுத்த பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால் நாட்டின் பங்குச் சந்தைகளில் உற்சாகம் களைகட்டியிருக்கிறது.
மும்பை பங்குச் சந்தையும் தேசிய பங்குச் சந்தையும் இன்று காலை முதல் கணிசமான புள்ளிகள் உயர்வுகள் ஏற்முகத்தில் இருந்து வருகிறது.
குறிப்பாக சில்லரை வர்த்தக நிறுவனங்கள், விமான சேவை நிறுவனங்களின் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்கள் வாங்குவதில் முனைப்பு காட்டுகின்றன.
இதனிடையே இன்று ரிசர்வ் வங்கியும் காலாண்டு மறு ஆய்வை மேற்கொள்வதால் பெரும் எதிர்பார்ப்பு பங்குச் சந்தையில் நிலவி வருகிறது. கடந்த ஓராண்டுகாலத்தில் இல்லாத உயர்வை இன்றைய பங்குச் சந்தை எதிர்கொண்டிருப்பது தொழில்துறையில் உற்சாகத்தை உருவாக்கி உள்ளது.