வரும் 20-ந் தேதி இலங்கை செல்கிறது தமிழக தொழில் வர்த்தக சங்க குழு

By Mathi
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: தமிழக தொழில் வர்த்தக சங்கக் குழுவின் 45 பேர் அடங்கிய குழு ஒன்று இருதரப்பு வர்த்தக உறவை மேம்படுத்துவதற்காக இலங்கை வருவதாக இலங்கையின் தொழில்வர்த்தக சபை அறிவித்துள்ளது.

மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தமிழக தொழில்வர்த்தக சங்கக் குழுவினர்தான் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக்க முயற்சிகளை மேற்கொண்டனர். இதனால் மதுரையிலிருந்து வரும் 20-ந் தேதி கொழும்புக்கு செல்லும் முதலாவது சர்வதேச விமானத்தில் 45 பேர் அடங்கிய தொழில் வர்த்தக சங்கக் குழுவினர்பயணம் மேற்கொள்கின்றனர். இவர்கள் இலங்கை சென்று அங்கு தொழில் முதலீடுகள் குறித்து விவாதிக்க உள்ளதாக இலங்கை வர்த்தக சபை தெரிவித்துள்ளது.

தமிழினப் படுகொலை நிகழ்த்திய இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில் தமிழக தொழில் வர்த்தக சங்கக் குழுவினர் இலங்கை செல்ல தீர்மானித்திருப்பது தமிழ் அமைப்புகளிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது,

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tamil Nadu trade team to visit Sri Lanka | இலங்கை செல்கிறது தமிழக தொழில்வர்த்தக சங்க குழு

A 45-member trade delegation from Tamil Nadu will visit Sri Lanka this week to explore ways to improve trade relations between the country and the southern Indian state.
Story first published: Tuesday, September 18, 2012, 10:04 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?