உள்நாட்டு தேவை குறைவு: கேரளா-தமிழகம் மாநிலங்களில் தேங்காய் எண்ணெய் விலையில் சரிவு

Posted By:
Subscribe to GoodReturns Tamil

கேரளா-தமிழகம் மாநிலங்களில் தேங்காய் எண்ணெய் விலையில் சரிவு
கொச்சி: உள்நாட்டில் நுகர்வோரின் தேவை குறைந்துள்ளதால், தமிழகம் மற்றும் கேரளாவில் தேங்காய் எண்ணெய் மற்றும் பாமாயில் விலை குறைந்துள்ளது.

இந்தியாவில் உள்நாட்டு சந்தையில் தேங்காய் எண்ணெய், பாமாயில் ஆகியவற்றின் தேவை குறைந்துள்ளது. இதனால் இவற்றின் விலையும் சரிந்துள்ளது. கேரளாவில் கடந்த வாரம் தேங்காய் எண்ணெய் லிட்டர் ரூ.61க்கு விற்கப்பட்டது. ஆனால் இந்த வாரம் ரூ.60.50 என்று குறைந்துள்ளது. அதேபோல கடந்த வாரம் தமிழகத்தில் தேங்காய் லிட்டருக்கு ரூ.58 என்று விற்கப்பட்டது. ஆனால் இந்த வாரம் லிட்டர் ரூ.55.50 ஆக குறைந்துள்ளது.

இதேபோல கடந்த வாரம் பாமாயில் கிலோ ரூ.60 வரை விற்கப்பட்டது. ஆனால் இந்த வாரம் ரூ.58 ஆக குறைந்துள்ளது. மேலும் பார்ம் கெர்னல் எண்ணெய் லிட்டர் ரூ.56லிருந்து ரூ.55 ஆக விலை குறைந்துள்ளது.

கொப்பரை தேங்காய் விலையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் ரூ.4,200க்கு விற்கப்பட்ட ஒரு குவிண்டால் கொப்பரை தேங்காய், தற்போது ரூ.4,150 என்று விற்கப்படுகிறது. அதேபோல தமிழகத்தில் ரூ.3,900க்கு விற்கப்பட்ட ஒரு குவிண்டால் கொப்பரை தேங்காய், தற்போது ரூ.3,800 ஆக விற்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Coconut oil prices down in Kerala and TN | கேரளா-தமிழகம் மாநிலங்களில் தேங்காய் எண்ணெய் விலையில் சரிவு

Lack of upcountry demand and low prices of other edible oils hampered the coconut oil market in Kerala this week. Prices fell to Rs 60.50 per kg in Kerala against Rs 61 quoted last week, while in Tamil Nadu the rates fell to Rs 55.50 per kg from Rs 58 per kg.
Story first published: Friday, September 21, 2012, 8:32 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns